மாவீரன் ஓடிடி குறித்த அப்டேட்…!

 மாவீரன் ஓடிடி குறித்த அப்டேட்…!

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

ரசிகர்களின் வரவேற்பையும் வசூலையும் குவித்துவரும் இந்தப் படம் கடந்த 11 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளதாக படக்குழு சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்டேட் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவீரன் படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 3ம் வாரத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...