ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நெட் பேங்கிங் பயன்படுத்தலாம்

 ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நெட் பேங்கிங் பயன்படுத்தலாம்

நண்பர்களே சமீபத்தில் நாட்டுடைமை வங்கி ஒன்றில் எனது நீண்ட நாள் வங்கிக்கணக்கு இருந்தது. அதனில் நெட் பேங்கிங் செய்வதற்காக முயற்சிகள் எடுத்தேன். ஏ.டி.எம். கார்டு இருந்தால்தான் நெட்பேங்கிங் செய்ய முடியும் என்று கூறிவிட்டார்கள். ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நெட் பேங்கிங் செய்து கொடுங்கள் என்று பலமுறை வங்கிக்கு நேரில் சென்று கோரிக்கை வைத்தேன்.

வங்கியின்  மொபைல் போன் ஆஃப் வழியாக எனக்கு வங்கிக் கணக்கை நெட் பேங்கிங் செய்யலாம் என்று தெரிவித்தார்கள். ஆனால் எனது வங்கிக் கணக்கிற்கு மொபைல் போன் ஆஃப் வழியாக நெட் பேங்கிங் செய்ய இயலவில்லை. இதன்  தொடர்ச்சியாகப் பலமுறை வங்கிக்குச் சென்று பலனளிக்காமல், இறுதியாக ஆர்.பி.ஐ.யின் ஓம்புட்ஸ்மேன் வழியாகச் சென்று  கம்பளைண்ட் பதிவு செய்தேன். அதன் தொடர்ச்சியாக வங்கியிலிருந்து தபால் வழியாக பாஸ்வேர்டு எனக்கு அனுப்பப்பட்டது. 

ஆனால் அந்த பாஸ்வேர்டையும் வைத்து முயற்சி செய்தால் அதுவும் செயல்படவில்லை. பலனளிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக மீண்டும் விடாமல் ஆர்.பி.ஐ. ஓம்புட்ஸ்மேனின் தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொண்டேன்.

அவர்களோ வங்கியிலிருந்து பதில் வந்துவிட்டது. இனிமேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நுகர்வோர் கோர்ட்டை அணுகி பதில் பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டார்கள்.

மீண்டும் சி.பி.ஜி.ஆர்.எம். வழியாக எனது கம்ப்ளைன்ட்டை பதிவு செய்தேன். சி.பி.எம். என்பது பிரதம மந்திரியின் திட்டத்தில் நேரடி வங்கி மற்றும் பல்வேறு பினான்சியல் தொடர்பான தகவல்களுக்கு வாடிக்கையாளர்கள் கம்பிளைண்ட்  செய்யக்கூடிய வசதி ஆகும்.

இதனில்  நாம் கம்ப்ளைன்ட் செய்தால் நேரடியாக வங்கியுடைய பொது மேலாளருக்கு கம்ப்ளைன்ட் அனுப்பப்படும். பிறகு மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். நாம் அவ்வப்போது சென்று நமது புகார் எந்த நிலையில் உள்ளது? யாரிடம் உள்ளது என்கிற தகவல்களை அறிய முடியும்.

இதன் மூலம் ஓரளவிற்கு நியாயமான பதிலை நாம் பெற முடியும். ஏனெனில் அவர்கள் நமக்கு வங்கியிலிருந்து பதிவு தபால் மூலம் இதற்கான பதில் அனுப்ப வேண்டும். அந்தப் பதிவு தபால் மூலம் அனுப்பிய பதிலை ஆன்லைன் மூலமாக டாக்குமெண்டை அந்த போர்டளிலும் அப்டேட் செய்து விடுவார்கள்.எனவே நாம் அங்கேயும் சென்று அவர்கள் கொடுத்த பதிலைத்  தெரிந்துகொள்ளலாம்.

அவர்கள்  கொடுத்த பதிலில்  ஐந்து ஸ்டாரில் எந்த ரேட்டிங் உள்ள ஸ்டாரை கொடுக்கலாம் என்கிற தகவலையும் அவர்களே போன் செய்து கேட்பார்கள். அதற்கான பதிலையும் நாம் கொடுக்கலாம்.

எனக்கு அதில் அவர்கள் கொடுத்த பதிலில் திருப்தி இல்லை என்றால் மீண்டும் நாம் அவர்களை அந்த கம்பிளைன்டோ re-open செய்து மறுபடியும் பதிவேற்ற வகை செய்யப்பட்டுள்ளது.

பொதுவுடைமை  வங்கியிலிருந்து எனக்கு பாஸ்வேர்டு செயல்படவில்லை என்கிற தகவலை CPGRM  வழியாக நான் பதிவு செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக வங்கியில் இருந்து என்னை 5 அல்லது 6 முறை அழைத்து கடைசியாக எனக்கு அதனை டிஜிட்டல் முறையில் சரி செய்து கொடுத்தார்கள்.

அனைத்தும்  சரி செய்த பிறகு எனக்கு அவர்களிடமிருந்து ஈமெயில் பெறப்பட்டது. டெல்லியிலிருந்து CPGRM  மூலமாக தொலைபேசி என்னை தமிழ் மொழி பேசி  தொடர்புகொண்டு உங்களது கம்பிளைன்ட்ஸ் சரிபட்டு விட்டது. உங்களுக்குத் திருப்திதானே? திருப்தி என்றால் 5 ஸ்டார். எந்த ஸ்டார் கொடுக்க விரும்புகிறீர்கள்? என்பது உட்பட கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

எனவே சாமானியனுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் பல்வேறு விதமான புகார்களை உட்கார்ந்த இடத்தில் உங்களது வீட்டில் இருந்தே புகார் கொடுக்க கூடிய வகையில் இந்த CPGRM  தளம் செயல்படுகிறது என்பதைத் தெளிவு படுத்தவே தற்பொழுது இந்த்த தகவல் தெரிவிக்கப்படுகிறது.

நீங்களும் இந்த சிபிக்கிரம் வழியாகச் சென்று உங்களது குறைகளை புகார்களை இணையத்தின் வழியாக உங்களது வீட்டில் இருந்தே தெரியப்படுத்தலாம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

– எம்.எஸ்.லட்சுமணன், காரைக்குடி

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...