மெல்லிசை மாமணி வி.குமார்

 மெல்லிசை மாமணி வி.குமார்

மெல்லிசை மாமணி வி.குமார் பிறந்த தினம்(july 28 )

”மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட வி. குமார் (சூலை 28, 1934 – சனவரி 7, 1996) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன்கே. வி. மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார். இவர் தொடர்ச்சியாக பல கே. பாலச்சந்தரின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். காதோடுதான் நான் பேசுவேன்உன்னிடம் மயங்குகிறேன்நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்கண்ணொரு பக்கம்இளமை கோவில் ஒன்று இரண்டே தீபங்கள்சிவப்புகல்லு மூக்குத்திவா வாத்யாரே வூட்டாண்டநீ போட்ட மூகுத்தியோநானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை , போன்றப் பாடல்கள் இவரின் தலைசிறந்த பாடல்களாகும்

இசையமைப்பாளர் வி.குமாரைப் பற்றி இந்த தலைமுறை இளைஞர் களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங் களில் இசை

நிகழ்ச்சிகளில் ரசித்திருப்பார்கள். ரசிக்கும் போது அந்தப் பாடல்கள் வேறு ஒரு இசையமைப்பாளருடையது என்ற நினைவுடனேயே ரசித்திருப்பார்கள்.

மெல்லிசை மன்னர்கள் பிரிந்து அவர்களில் எம்.எஸ்.வி. உச்சத்தில் கோலோச்சிய காலத்தில் அறிமுகமான ஏனைய இசையமைப்­பா­ளர்­களில் வி.குமார் குறிப்பிடத் தக்கவர். இவரின் மெலடிப் பாடல்கள் எம்.எஸ்.வியின் பாணியிலிருந்து வித்தியாசமாக இருந்தன. உன்னிடம்

மயங்குகின்றேன் என்ற ஜேசுதாசின் மகுடத்தில் வைரமாக ஜொலிக்கும் பாடலை உருவாக்கியவர் இவர்தான்.

இவரது பெற்றோர் வரதராஜு-தனபாக்கியம். 28.7.1934-இல் பிறந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன் தொலைபேசி இலாகாவில் பணியாற்றினார். இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே இசைக்குழு அமைத்து இசைக்கச்சேரிகள் நடத்தி வந்ததோடு நாடகங்களுக்கும் இசை அமைத்து வந்தார். இவர் இசை அமைத்த முதல் நாடகம் ‘கண் திறக்குமா”. பிறகு ஓ.எம்.ஐ.ஏ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், மற்றும் மணக்கால் மணி குழுவினரின்

நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தார்.

மாநில கணக்காயர் அலுவலகத்தில்

பணியாற்றி வந்த அனந்த சயனம் என்ற நண்பர் மூலமாக ராகினி ரிக்ரியேசன்ஸ்-இல் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. ராகினி கிரியேசன்ஸின் ”வினோத ஒப்பந்தம்” என்ற நாடகத்திற்கு முதன் முதலாக இசை

அமைத்தார். ராகினி ரிக்ரியேசன்ஸில் தொடர்ந்து இசை அமைத்து வந்தபோது, அதன் இயக்குநர் கே.பாலசந்தருக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படம் “நீர்க்குமிழி”.

நீர்க்குமிழி நாடகத்தைப் படமாக்க, அதன் கதையை கே.பாலசந்தரிடமிருந்து ஏ.கே.வேலன்

வாங்கியிருந்தார். கதையைப் பற்றி விவாதிக்க, பாலசந்தர் வேலனைச் சந்திக்கப் போவார். அவருடன் இவரும் அடிக்கடி உடன் செல்வார். திடீரென்று ஒரு நாள் பேச்சுவாக்கில் ஏ.கே.வேலன், இந்தப் படத்திற்குக் குமாரையே இசை அமைக்கச் சொன்னால் என்ன என்று கேட்டார். ’நீர்க்குமிழி’ நாடகத்திற்கு இவர்தான் இசையமைத்திருந்தார். இதைக் கவனத்தில் கொண்டுதான் வேலன் பாலசந்தரிடம் கேட்டார். ‘பாலசந்தர் அப்படியே செய்யலாம் என்றார்’. அவ்வாறு நீர்க்குமிழி இவருக்கு முதல் படமானது.

‘நீர்க்குமிழி”யில் மூன்றே பாடல்கள்தான். மூன்றுமே வெவ்வேறு விதங்களில் நன்றாக அமைந்துவிட்டன. முதலிடம் பெற்றது ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’; ’கன்னி நதியோரம் வண்ண விழிமேடை’ என்ற டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய பாடல் இளமைத் துள்ளலுடன் வரும் காதல் பாடல். மேற்கத்திய பாணியைச் சேர்ந்த மெட்டு. ‘நீரில் நீந்திடும் மீனினமே’ என்ற பெண்மையின் கண்ணிய மான குரலாக ஒலிக்கும் சுசீலாவின் பாடல். வி.குமார் 1978-இல் இசையமைத்த ‘இவள் ஒரு சீதை’ என்ற படத்தில் பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு என்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய நேயர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற பாடலைக் கவியரசு கண்ணதாசன் ஐந்தே நிமிடங்களில் இவரது மெட்டுக்குப் பாடல் எழுதிக் கொடுத்தார் என்பது விஷேட அம்சம்.

இணையத்தில் படித்தது

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...