‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்காக அசத்தல் போஸ்டர் வெளியீடு!

 ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்காக அசத்தல் போஸ்டர் வெளியீடு!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் செப்.7-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது

இன்று (ஜூலை 24) படத்தின் வில்லன் விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அவருக்கான கேப்ஷனாக டீலர் ஆஃப் டெத் (மரணத்தின் வியாபாரி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜவான் திரைப்படம், செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...