சிரஞ்சிவி அறக்கட்டளை மீது அவதூறு…நட்சத்திர தம்பதிகளுக்கு 1 வருட சிறை..!!!

 சிரஞ்சிவி அறக்கட்டளை மீது அவதூறு…நட்சத்திர தம்பதிகளுக்கு 1 வருட சிறை..!!!

தெலுங்கு மற்றும் தமிழ் நடுத்துள்ள நட்சத்திர தம்பதி ஜீவிதா, ராஜசேகருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல நட்சத்திர தம்பதி ஜீவிதா, ராஜசேகர். இவர்கள் இது தாண்டா போலீஸ் உட்பட பல தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளனர்.
ஜீவிதா 1980-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசிக்கிறார்கள்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடத்தும் ரத்த வங்கி குறித்து பல வருடங்களுக்கு முன்பு இருவரும் சர்ச்சை கருத்தை வெளியிட்டனர். நன்கொடையாக பெறப்படும் ரத்தத்தை சிரஞ்சீவி வெளி மார்க்கெட்டில் விற்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதையடுத்து சிரஞ்சீவியின் உறவினரும் தயாரிப்பாளாருமான நடிகர் அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், சிரஞ்சீவி அறக்கட்டளை மற்றும் அவர் பெயரில் நடக்கும் ரத்த வங்கி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜசேகர் கூறியதாக, ஹைதராபாத் நாம்பள்ளி 17-வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

நடிகர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதி, நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை குறித்து தவறான கருத்துத் தெரிவித்ததால், அவர்களுக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் அபராதத் தொகையை கட்டியதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...