சான் டியாகோ காமிக்-கானில் வெளியிடப்பட உள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் தலைப்பு மற்றும் டீசர்!

 சான் டியாகோ காமிக்-கானில் வெளியிடப்பட உள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் தலைப்பு மற்றும் டீசர்!

ப்ராஜெக்ட் கே திரைப்படம், ஜூலை 20 முதல் 23 வரை நடைபெறும் சான் டியாகோ காமிக்-காம் 2023 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது.

பிரபாஸ் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பக்கா சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இந்த ப்ராஜெக்ட் திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, முன்னணி கதாபாத்திரங்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், தீபிகா படுகோனே மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர். மகாநடி திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் நாக் அஸ்வின் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தை இயக்குகிறார்.

ப்ராஜெக்ட் கே, படம் தான், சான் டியாகோ காமிக்-கானில் பங்கேற்கும் முதல் இந்தியத் திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. சான் டியாகோ காமிக் கான் நிகழ்வில் பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன், நாக் அஸ்வின் உள்ளிட்ட திரையுலகினர் பலர்  பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சி துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தற்போது பிரபாஸ் மற்றும் ராணா அமெரிக்காவில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ப்ராஜெக்ட் கே திரைப்படம் அடுத்த ஆண்டு  2024 ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தை, வைஜெயந்தி மூவிஸ் பேனரில் அஸ்வினி தத் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ப்ராஜெக்ட் கே என தற்காலிகமாக அழைக்கப்படும், இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர், சான் டியாகோ காமிக்-கானில் வெளியிடப்பட உள்ளது

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...