இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே” முதலான தேசிய கீதங்களை பாடிய இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம் ஜூலை 16 ,2009. 😢

டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ( மார்ச் 28 , 1919 – ஜூலை 16 ,2009 . காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் , இவரது பேத்தி ஆவார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் ‘பெண் மும் மூர்த்திகள்’ என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் பட்டம்மாள் ஒருவர் .

தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார் .. 1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், 1932 இல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார் . பின்னர் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் நிறைய தேச பக்தி பாடல்களை பாட ஆரம்பித்தார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார்.

பாபநாசம் சிவன் , கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார். பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். ஜப்பானிய ‘ அகிகோ ‘வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.

பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மான் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

‘தேசியக் குயில்’ என்று போற்றப்பட்ட டி.கே.பட்டம்மாள் 90-வது வயதில் இதே ஜூலை 16 (2009) மறைந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!