வசந்தபாலனின் “அநீதி”….மிரட்டும் அர்ஜூன் தாஸ்…!!!

 வசந்தபாலனின் “அநீதி”….மிரட்டும் அர்ஜூன் தாஸ்…!!!

அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி. இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைப்பெற்றது. இதில் படத்தில் நடித்த மற்றும் பங்குபெற்ற குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தின் பாடல் மற்றும
இசை வெளியீட்டு விழா மாலை நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது “அநீதி” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் ‘s pictures பெற்றுள்ளது. ‘அநீதி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியாக படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...