உலகின் ‘பணக்காரப் பிச்சைக்காரர்’ பரத் ஜெயின் வரலாறு

 உலகின் ‘பணக்காரப் பிச்சைக்காரர்’ பரத் ஜெயின் வரலாறு

உலகளவில் பணக்காரப் பிச்சைக்காரராக அங்கீகரிக்கப்பட்ட பாரத் ஜெயினின் நிகர மதிப்பு ரூபாய் 7.5 கோடி ($1 மில்லியன்) இருந்தபோதிலும், அவர் பிச்சை எடுப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது மாத வருமானம் ₹60,000 முதல் 75,000 வரை இருக்கும். அதுமட்டுமல்லாது அவருக்கு மும்பையில் மதிப்புமிக்கச் சொத்து உள்ளது.

உலகளவில் பணக்காரப் பிச்சைக்காரராகக் கருதப்படும் பாரத் ஜெயின், மும்பையின் தெருக்களில் பிச்சை எடுக்கும் ஒரு முக்கிய நபர்.

பாரத் ஜெயின் மும்பையில் ₹1.2 கோடி மதிப்புமிக்க இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளார். மற்றும் தானேயில் இரண்டு கடைகளின் உரிமையுடன். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார், இதன் மூலம் மாத வாடகை வருமானம் ரூபாய் 30,000.

பாரத் ஜெயின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் அல்லது ஆசாத் மைதானம் போன்ற முக்கிய இடங்களில் பிச்சை எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கணிசமான செல்வம் இருந்தபோதிலும், பாரத் ஜெயின் மும்பை தெருக்களில் பிச்சை எடுப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நீண்ட நேரம் உழைத்தாலும் சில நூறு ரூபாய்கள் சம்பாதிக்க பலர் போராடும் நிலையில், மக்களின் தாராள மனப்பான்மையால் 10 முதல் 12 மணிநேரத்திற்குள் ஒரு நாளைக்கு ₹2000 – 2500 வரை வசூலிக்கிறார் பாரத் ஜெயின்.

இதன் காரணமாக, பாரத் ஜெயின் குடும்பத்தினர் பரேலில் உள்ள 1BHK டூப்ளக்ஸ் குடியிருப்பில் வசதியாக வாழ்கின்றனர். அவர்களின் குழந்தைகள் ஒரு கான்வென்ட் பள்ளியில் படிக்கிறார்கள்.  

அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் ஒரு ஸ்டேஷனரி கடையை நடத்துகிறார்கள்,

பாரத் ஜெயின் தனது மனைவி, இரண்டு மகன்கள், அவரது சகோதரர் மற்றும் அவரது தந்தையை உள்ளடக்கிய குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

பாரத் ஜெயினின் குழந்தைகள் தங்கள் கல்வியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

குடும்ப வறுமையின் காரணமாக, அவரால் இளமையில் முறையான கல்வியைத் தொடர முடியவில்லை. படிப்பின்மையால் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதனால் பிச்சை எடுக்கத் தொடங்கியவருக்கு அதுவே அவரது தொழிலாக ஆனதுதான் வேடிக்கை.

பிச்சை எடுப்பதை நிறுத்துமாறு பாரத்திற்கு அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள், ஆனால் அவர் பிச்சை எடுப்பதையே தொடர்கிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...