வடிவேலு எல்லாம் ஒரு நடிகரா..
வடிவேலு எல்லாம் ஒரு நடிகரா..? எதிர்நீச்சல் “மாரிமுத்து” டுவிஸ்ட்.. அந்த “ஓலை பாய்” கதை தெரியுமா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிகரும் இயக்குனருமாக இருக்கும் மாரிமுத்து நடித்து வருகிறார்.
இவர் நடிகர் சீமானோடு துணை இயக்குனராக பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் இயக்கும்போது நடந்த சுவாரசியமான கதை மற்றும் அந்த திரைப்பட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு நடிகர் வடிவேலு பற்றியும் அவரோடு பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் வடிவேலுவின் குணநலன்கள் பற்றியும் மாரிமுத்து பல தகவல்களை கூறி இருக்கிறார்
இதுவரைக்கும் வெள்ளித்திரையில் நடிகராகவும், இயக்குனராகவும் இருந்து வந்த மாரிமுத்து முதல்முறையாக சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் மூலமாக இவர் 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகனாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கடந்து வந்த பாதை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது நடிகர் வடிவேலு பற்றி கூறியிருக்கிறார். வடிவேலு ஒரு காமெடி நடிகராக பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் “நடிகரே கிடையாது”. நிஜத்தில் அவர் ஒரு “லெஜெண்ட்”. கதை என்று வந்துவிட்டால் அப்படியே கேரக்டராக மாறிவிடுவார். அதனால்யே அவருடைய நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. எத்தனையோ பேரு நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதும் “நடிகன் என்றால் நான் அது வடிவேலு தான்” என்று கூறுவேன். அவர் ரொம்பவே வித்தியாசமானவர். சொல்லும் கதையை புரிந்து கொண்டு அவருடைய உடல் மொழியோடு அப்படியே நடித்து விடுவதால் தான் அவர் இன்னைக்கும் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். எனக்கு பிடித்த நடிகர் என்றால் எப்போதும் அதில் வடிவேலு இருப்பார். வடிவேலு கூட நான் பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் வேலை பார்த்து இருக்கிறேன். அந்த திரைப்படத்தை இயக்கியது சீமான் தான். சீமான் சொன்னதை அப்படியே புரிந்து கொண்டு வடிவேலு அவ்வளவு அழகாக நடித்து இருப்பார். சீமானின் கதை வித்தியாசமாக இருந்தது. அதை பலராலும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இருந்தாலும் அந்த திரைப்படத்தில் இருந்த காமெடியை யாராலும் மறக்க முடியாது. அதுவும் வடிவேலு காமெடி இப்ப வரைக்கும் பேசப்படுகிறது என்றால் அது அவருடைய நடிப்பு தான் குறிப்பாக அந்த “ஓலை பாய்” காமெடி பலருக்கும் பிடிச்சிருக்கும்