வேலூரில் பிறந்த “கோலி சோடா”.. தமிழகத்திலேயே முதல் சாதனை.. 100 ஆண்டு கோலிசோடாவில் “நிமிரும் வேலூர்”
வேலூர் கண்ணுச்சாமி என்பவரை பற்றின பேச்சாகத்தான் இருக்கிறது இணைய தளம் முழுவதும்.. என்ன காரணம்.. யார் இந்த கண்ணுச்சாமி முதலியார்
இன்றைய காலகட்டம்போல, பெரிய பெரிய கடைகள் அவ்வளவாக இல்லாத அன்றைய சூழலில், சாதாரண பெட்டிக்கடைகள்தான், ஏழை எளிய மக்களின் வாழ்வாதார கடைகளாக விளங்கி கொண்டிருந்தன.
கோலி சோடா: அதனால், தான் இறக்குமதி செய்த கோலி சோடாவை, இந்த பெட்டிக்கடைகளுக்குதான் சப்ளை செய்துள்ளார்.. அன்று சுற்றுவட்டார கிராமங்களுக்கு வேலூர்தான் மையப்பகுதியாக இருந்திருக்கிறது. அதனால், வேலூர் வரும் மக்கள், இந்த கோலி சோடாவை குடித்துள்ளனர்.. சென்னை, பெங்களூர் மக்கள் பயணம் மேற்கொண்டால், வேலூர் கோலிசோடாவை விரும்பி சாப்பிட்டுவிட்டுதான் போவார்கள். அனைவருக்கும் இதன் ருசி பிடித்துவிடவும், அதற்கு பிறகே, மற்ற வெளியூர்களுக்கு பரவி, அதற்கு பிறகு மற்ற மாநிலங்களிலும் இதன் சிறப்பு பரவ தொடங்கியுள்ளது.
கூல்டிரிங்ஸ் என்றாலே, அப்போது கோலிசோடா மட்டும்தானாம்.. வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், இந்த கோலி சோடாவை வாங்கி தந்து உபசரிப்பார்களாம்.. எனவே, வீடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக இந்த கோலி சோடா அந்தஸ்தை பெற்றுவிடவும், பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் கோலி சோடா தாராளமாக புழங்க ஆரம்பித்து விட்டது. முதன் முதலில் தயார் செய்யப்பட்ட கோலி சோடா பாட்டில், இன்றும் வேலூரில் உள்ள கண்ணன் சோடா கம்பனியில் அவரது தலைமுறையினர் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம்.. அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப்பட்டுள்ளது. ஆக, தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தயாரானது வேலூரில்தான் என்பது நமக்கு பெருமைக்குரிய விஷயமாகும். கண்ணுசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட கோலி சோடா இப்போது 100-வது ஆண்டை எட்டி வருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியாகும்.
அதுவும் சுதந்திரத்திற்கு பிறகு கோலி சோடா விற்பனை மேலும் அதிகரித்துவிட்டதாம்.. இதற்கு பிறகு ஏகப்பட்ட கூல்டிரிங்க்ஸ்களின் வருகை அதிகமாக தொடங்கியது.. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது உள்ளூர் குளிர்பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்ற பொதுமக்களிடையே ஒரு எழுச்சி ஏற்படவும், மறுபடியும் கோலி சோடாவுக்கான விற்பனை சூடுபிடித்துவிட்டதாம். இன்று எத்தனையோ கூல்டிரிங்க்ஸ்கள் வந்துவிட்டாலும், இந்த கோலி சோடாவுக்கு இருக்கும் மவுசு இன்னமும் குறையவில்லை.