வண்ணாரப் பேட்டையிலே”பாடலில் கலக்கி வரும் அதிதி…!!பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிதி சங்கர்…!!

 வண்ணாரப் பேட்டையிலே”பாடலில் கலக்கி வரும் அதிதி…!!பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிதி சங்கர்…!!

!

இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அதிதி. இதையொட்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் அதிதி ஷங்கர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே நடிப்பிற்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதிதி.

இந்தப் படத்தில் அவரது நடிப்பு, டான்ஸ் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தில் ஒரு பாடலையும் பாடி, சிறந்த பாடகியாகவும் ரசிகர்களிடையே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

கடந்த ஆண்டில் வெளியான விருமன் அதிதிக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ஜூலை 14ம் தேதி தமிழ், தெலுங்கில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்திலும் அவரது பாடல் இல்லாமலா.. வண்ணாரப் பேட்டையிலே என்று சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து பாடியுள்ள பாடல் பட்டி தொட்டியெல்லாம் ட்ரெண்டாகி வருகிறது.

இன்றைய தினம் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அதிதி ஷங்கர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...