பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடி மகிழும் நட்சத்திர ஜோடி…!!!!

 பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடி மகிழும் நட்சத்திர ஜோடி…!!!!

குடும்பமாக அழகிய தீவுக்கு சென்றுள்ள சூர்யா- ஜோதிகா தம்பதிகள் இருவரும் மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

சூர்யா மற்றும் ஜோதிகா  தங்கள் இரு குழந்தைகளுடன் டென்மார்க்கிற்கு சுற்றுலா சென்ற விடியோவை, ஜோதிகா தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஜோதிகாவுக்கு பலரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகள் சூர்யா ஜோதிகா, குடும்பம் திரைத்துறை என இரண்டையுமே வெற்றிகரமாக அழகாக நேர்த்தியாக திட்டமிட்டு கொண்டு செல்வதில் பலருக்கும் இவர்கள் மீது ஆச்சர்யம் தான்

இவர்களது பிள்ளைகள் தியா மற்றும் தேவ், இருவரது படிப்புக்காக மும்பையில் செட்டிலாகிவிட்டார்கள்.

சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுவந்த விடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...