பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்

 பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்

நடிகர் டாம் குரூஸின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்கள், அவருக்கான வாழ்த்துகளால் நிரம்பி வழிகிறது.💐

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். 1981-ம் ஆண்டு வெளியான ’எண்ட்லெஸ் லவ்’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான இவர், 1983 ஆம் ஆண்டு வெளியான ’ரிஸ்கி பிசினஸ்’ மூலம் ஹீரோவாக உயர்ந்தார். இந்தப் படம் அவரை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்ல,1986-ல் வெளியான ‘டாப் கன்’ படம் அவர் புகழை இன்னும் பரப்பியது.

பிறகு வெளியான ‘மிஷன்: இம்பாசிபிள்’ தொடர் வரிசைப் படங்களின் உளவாளி கேரக்டருக்கு அவர் வந்தபிறகு, உலகம் முழுவதும் ரசிகர்களின் மனங்களில் ஆழமாக இடம் பிடித்துவிட்டார் டாம் குரூஸ். அவருடைய ரிஸ்கான ஆக்‌ஷன் அவதாரங்களை படங்களில் காண ஆச்சரியத்தோடு காத்திருக்கத் தொடங்கினார்கள் ரசிகர்கள். இன்று வரை அது அப்படியே தொடர்கிறது.

’இத்தனை வருடங்களாக எங்களை மகிழ்த்து வரும் ஆக்‌ஷன் ஸ்டார் டாம் குருஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்றும் டாம் குரூஸ் ஒரு ஆக்‌ஷன் லெஜண்ட் என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...