சிவகார்த்திகேயனின் “மாவீரன்” அப்டேட்…!

 சிவகார்த்திகேயனின் “மாவீரன்”  அப்டேட்…!

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு குழு அறிவித்திருந்தது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்திருப்பவர் சிவகார்த்திகேயன்
அவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்த நிலையில் திரைப்படத்தின் ப்ரோமோ பணிகள் குழுவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமேசான் பிரைம் நிறுவனம் இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமைகளை வாங்கி உள்ளது. திரைப்படத்திற்கான சேட்டிலைட் ரைட்ஸ்களை சன் டிவி மிகப்பெரிய தொகை ஒன்று கொடுத்து வாங்கி இருக்கிறது.

மண்டேலா திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்ற மடோனா அஸ்வின் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் சிவா கார்த்திகேயனுடன் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் இயக்குனர் மிஸ்கின் யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கவுண்டமணி சுனில் மற்றும் சரிதா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு பாரத் ஷங்கர் என்பவர் இசையமைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு “மாவீரன்’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜூலை 14ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் ‘மாவீரன்’ திரைப்படம் வெளியாகவிருக்கும் என அறித்துள்ளார்கள். இப்படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...