உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை
கள்ளச் சாராயம் குடித்து உயிர் பலியாவது ஒருபுறம் என்றால் அறிவியல்படி தயாரிக்கப்பட்ட அலோபதி மருந்து மாத்திரைகளிலும் கலப்படப் போலி மருந்துகள் வந்துவிட்டன என்று அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயம் வேண்டும் என்று உஷார்படுத்தியுள்ள மத்திய அரசு நிறுவனமான மத்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம், அதைக் கண்டறியும் வெப்சைட்டையும் தந்துள்ளது.
அந்தப் போலி மருந்து, மாத்திரைகள் ‘கர்நாடகா, ஹிமாச்சலபிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட, 36 வகையான மருந்துகள் தரமற்றவை’ என மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளையும், மத்திய மற்றும் மாநில மருந்துத் தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன.
கடந்த மாதத்தில் 895 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், கால்சியம், இரும்புச்சத்து, உயர் ரத்தஅழுத்தம், மார்பகப் புற்றுநோய், கிருமித் தொற்று பாதிப்பு, ஜீரண மண்டல பாதிப்புக்குப் பயன்படுத்தப்படும் 36 மருந்துகள் தரமற்றவையாக இருந்தன.
தரமற்ற மருந்து விவரங்கள், மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின், cdsco.gou.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கண்டறிந்து தவிர்த்துவிடுங்கள்.