நடிகர் பி.ஆர்.துரை பகிர்ந்துகொள்ளும் காலச்சக்கரம் சுழல்கிறது-6

 நடிகர் பி.ஆர்.துரை பகிர்ந்துகொள்ளும் காலச்சக்கரம் சுழல்கிறது-6

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

இலக்கிய உலகத்திற்குக் கிடைத்த ஒரு நல்முத்து கவிஞர் ரவி சுப்பிரமணியன், எனும் எழுத்து உலகப் படைப்பாளி. 1963ல் பிறந்த இவர் ஒரு பன்முகக் கலைஞர்.

வானொலி, தொலைக்காட்சி, இயல், இசை, நாடகம், டி.வி., மீடியா போன்ற எல்லாவற்றிலும் இவர் தடம் பதித்தவர். எண்ணற்ற நூல்களைக் கவிதை வடிவில் படைத்தவர். இவரது நூல்களைப் படிக்கும்போது பிரமிக்கத்தக்க புதுப்புது தமிழ் சொற்களை நாம் காண முடியும். அது கண்டுபிடித்து எழுதுவது அல்ல, தானாகவே வந்து விழும்.

ரவி சுப்பிரமணியன் மேடையில் பேசும்போது இலக்கிய உலகின் தரமான படைப்பாளிகளின் பெயர்களை எல்லாம் குறிப்பிடும் பழக்கம் அவருக்கு இயல்பாகவே ஏற்பட்ட ஒன்று.

கவிஞர்கள், எழுத்தாளர்கள் சம்பந்தப்பட்ட கூட்டம் என்றால் அதை எடுத்து நடத்தும் பொறுப்பு இவரிடம்தான் வழங்குவார்கள்.

இவருக்குத் தெரியாத எழுத்தாளர்களோ, இலக்கியவாதிகளோ இருக்க முடியாது. காரணம் இவர் சிறு வயதிலேயே சாகித்திய அகாடமியில் உறுப்பினராக இருந்தவர். இவர் தற்போது மணி விழாவை நெருங்கி உள்ள மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளி.

எழுத்து உலகில் பிரபலமானவர்கள் எல்லோருமே இவரது Finger Printsல் இருப்பார்கள். மேடையில் இவர், தான் எழுதியுள்ள கவிதை வரிகளை இசையமைத்து பாடும்போது எழும் கைதட்டலால் அரங்கமே அதிரும்.

இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், திரிலோக சீதாராம், தி.நா.ராமச்சந்திரன், எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய ஆளுமைகளின் ஆவணப் படங்களை எல்லாம் எழுதி இயக்கி உள்ள இவர், தற்போது இயக்குநர் K.பாலசந்தரைப் பற்றிய ஒரு ஆவணப் படத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்.

1988ல் S.விஜயலட்சுமியை தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்ட இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் வாரிசாக உள்ளார்கள்.

திறமையும், பெருமையும் மிக்க இவர் நூற்றுக்கணக்கான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார்.

இந்த விருதுகளை எல்லாம் வைப்பதற்கு ஒரு நல்ல வீட்டையும் பரிசாக கொடுத்திருந்தால் இலக்கிய உலகமே பெருமைப்பட்டிருக்கும்.

நான் நேசிப்பது மிகச் சிறந்த ஆளுமையான கவிஞர் எனது அருமை நண்பர் ரவி சுப்ரமணியம் அவர்களைத்தான்.

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...