கிரேன் ஆபரேட்டர் to சினிமா டைரக்டர் | இயக்குனர் மணிபாரதி – மின்மினி மாத இதழ் – பிப் – 23
முதல் பேட்டி ஏவிஎம் ஸ்டுடியோவில் நடிகர் மோகனுடன். ‘வசந்தி’ படப்பிடிப்பு. (அப்போது நான் சிறிதும் யோசிக்கவில்லை – என் முதல் படத்தை ஏவிஎம் நிறுவனம்தான் தயாரிக்கும் என்பதை) மோகனிடம்
“உங்கள் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைகின்றனவே” என்று முதல் கேள்வியை ஆரம்பித்தேன்.
அவருக்குக் கோபம் வந்ததே பாருங்கள். வானத்திற்கும் பூமிக்கும்…
—————————————
பாண்டியராஜனும், சீதாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவிய நேரம். நான் பாண்டியராஜனிடம் அது அது குறித்துக் கேட்டேன்.
அவர் “அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என மறுத்தார்.
நான் “நெருப்பு இல்லாம புகையாதே’’ என்றேன். அவர் கொஞ்சமும் யோசிக்காமல்…