ஈடுசெய்ய முடியாத இழப்பு ||கே.விஸ்வநாத் மறைவு

 ஈடுசெய்ய முடியாத இழப்பு ||கே.விஸ்வநாத் மறைவு

சரித்திரம் படைத்த சங்கராபாரணம், சலங்கை ஒலி சிப்பிக்குள் முத்து போன்ற படங்களின் இயக்குநர் கே.விஸ்வநாத் ஐதராபாத்தில் (2-2-2023) காலமானார். தமிழ் தெலுங்கு சினிமா துறையினரும் சினிமா ரசிகர்களும மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

கமல்ஹாசன் நடித்த குருதிப்புனல், ‘யாரடி நீ மோகினி’, ‘ராஜபாட்டை’, ‘லிங்கா’, ‘உத்தம வில்லன்’ போன்ற படங்களில் நடித்து தமிழில் அறியப்பட்ட பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத். இவர் ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் வென்றவர். 92 வயதான அவர் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரைத் துறந்தார்.

சினிமா வாழ்க்கை

1951இல் தெலுங்கு-தமிழ் திரைப்படமான என்.டி.ராமாராவ் நடித்த ‘பாதாள பைரவி’யில் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 1975-ல் முதன்முறையாக ‘ஆத்மகவுரவம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு பல வெற்றிப் படங்களை இயக்கினார்

தமிழில் குருதிப்புனல்,  முகவரி’, ‘காக்கைச் சிறகினிலே’, ‘பகவதி’, ‘யாரடி நீ மோகினி’, ‘அன்பே சிவம்’, ‘சிங்கம்-2’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலமும் முத்திரையைப் பதித்துள்ளார்.

திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருதையும் பெற்றுள்ளார்.

தமிழில் கடைசியாக , ‘சொல்லி விடவா’ என்கிற படத்திலும் நடித்திருந்தார். மேலும் பல தெலுங்கு திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.

விருது பெற்ற கிளாசிக் ‘சங்கராபரணம்’ மூலம் அவர் குறிப்பிடத்தக்க இயக்குநரானார். இது அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.

திரையுலகில் ஆல்ரவுண்டராகத் திகழும் கமல்ஹாசன், தெலுங்கு இயக்குநரும் நடிகருமான கே விஸ்வநாத் உட்பட மிகச் சிலரையே தனது வழிகாட்டிகளாகக் கருதுகிறார். அவர் சமீபத்தில் கூட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் உள்ள மூத்த இயக்குநர் கே விஸ்வநாத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்த கே.விஸ்வநாத்தின் தெலுங்குத் திரைப்படமான ‘சாகர சங்கமன்’ அசல் பதிப்பின் வெற்றிக்குப் பிறகு ‘சலங்கை ஒலி’ என்ற டைல் மூலம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது, மேலும் டப்பிங் பதிப்பும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழில் கே.விஸ்வநாத் இயக்கிய ஒரே படம் இது. கமல்ஹாசன், ஆர்.பார்த்திபன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா ஆகியோருடன் தன் திரைப்பயணத்தைப் பகிர்ந்துள்ளார் கே.விஸ்வநாத்.

கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்டுவந்த இவர், தனது 93 வயதில்  ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (2-2-2023) இரவு காலமானார். அண்ணார் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...