சிறந்த முதல்வர் ஓமந்தூரார் ராமசாமி
அரசியலில் தூய்மை பொது வாழ்வில் உண்மை என்று ஒரு சிலர்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார். இவர் தமிழ்நாட்டின் பத்தாவது முதலமைச்சராக இருந்தவர். அந்த மாமனிதரின் பிறந்த தினம் (1-2-2023) இன்று.
சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, வக்கீலுக்குப் படித்தவர். ஆனால் ஆளைப்பார்த்தால் பட்டிக்காடு மாதிரி தெரியும். நாசூக்காகப் பேசத் தெரியாதவர், எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆனால் பெருந்தன்மை, உண்மை, நாணயம், நேர்மை, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர்.
விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் என்ற ஊரில் 1895ஆம் ஆண்டு பிறந்தார் ராமசாமி ரெட்டியார். 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1949ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கு ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திறம்பட செயல்பட்டவர்.
சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்துக்கு எதிரில் 1979ஆம் ஆண்டுகள் காந்திஜி வாழ்ந்ததை குறிக்கும் வகையில் 79 அடி உயரத்தில் ஒரு ஸ்தூபியை வைக்க வேண்டுமென்று ஓமந்தூரார் விரும்பினார். அதை செயல்படுத்தும் முன் பதவி விலகினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ராமசாமி ரெட்டியார்தான் முதல்வர் பொறுப்பில் இருந்தார். சட்டசபையில் இவர் தலைமையில்தான் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றது.
இந்துக் கோவில்களில் அனைவரும் நுழைந்து வழிபடும் சட்டம், தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவை இவர் கொண்டுவந்த முக்கிய சட்டங்கள்.சென்னை மாகாண அரசுக்க ராமசாமி ரெட்டியார் ஹவில்லேண்ட்டோவ் என்கிற விமானத்தை வழங்கினார்.
ராமசாமி ரெட்டியார் சிறந்த தமிழ்ப்பறாளர், பாரதியாரின் நூல்களை நாட்டுடைமையக்கியவர்.
ஒரு முறை, திருப்பதியில் அமைந்திருந்த ஓலைச்சுவடி நூலகத்தை ஓமந்தூரார் பார்வையிடச் சென்றபோது அவரைச் சொற்பொழிவாற்றுமாறு கேட்டுக்கொண்டார்கள். தமிழில் பேசத் தொடங்கிய அவரைத் தெலுங்கில் பேசுமாறு கூறினார்களாம்.“எனக்குத் தெலுங்கு தெரியாது. என் தாயாருக்குத் தெலுங்கில் பேச்சுவழக்குச் சொற்கள் கொஞ்சம் தெரியுமென்றாலும், தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. என் தாய்மொழி தமிழ். நான் தமிழன். என் தாய்மொழியாகிய தமிழிலே பேசுகிறேன்” எனத் தயங்காது கூறினாராம். இவர் ஆட்சியில்தான் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்பட்டது. தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. திருக்குறள் முதன்முதலாகப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்டதும் இவர் ஆட்சியில்தான்.
ஓமந்தூரார் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று பிற்படுத்தப் பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும்தலா 14 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கி ஆணை பிறப்பித்ததன் மூலம் இந்தியாவில் முதன் முதலில் தனி இட ஒதுக்கீடு தந்த முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.
ஒரு முறை, திருப்பதியில் அமைந்திருந்த ஓலைச்சுவடி நூலகத்தை ஓமந்தூரார் பார்வையிடச் சென்றபோது அவரைச் சொற்பொழிவாற்றுமாறு கேட்டுக்கொண்டார்கள். தமிழில் பேசத் தொடங்கிய அவரைத் தெலுங்கில் பேசுமாறு கூறினார்களாம்.“எனக்குத் தெலுங்கு தெரியாது. என் தாயாருக்குத் தெலுங்கில் பேச்சுவழக்குச் சொற்கள் கொஞ்சம் தெரியுமென்றாலும், தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. என் தாய்மொழி தமிழ். நான் தமிழன். என் தாய்மொழியாகிய தமிழிலே பேசுகிறேன்” எனத் தயங்காது கூறினார். இவர் ஆட்சியில்தான் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்பட்டது. தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. திருக்குறள் முதன்முதலாகப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்டதும் இவர் ஆட்சியில்தான்.
ஓமந்தூரார் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று பிற்படுத்தப் பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் தலா 14 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி ஆணை பிறப்பித்ததன் மூலம் இந்தியாவில் முதன்முதலில் தனி இட ஒதுக்கீடு தந்த முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர்.
ஓமந்தூராரின் உள்ளூர் கோவிலில் அரிஜன மக்கள் வழிபடக்கூடாது என்ற நீண்ட கால வழக்கத்தை மாற்றி கோவிலில் உள்ள மூன்று கடவுளையும் தரிசிக்க ஏற்பாடு செய்தார்.
தமிழக அரசின் கோபுரம் சின்னத்தை உருவாக்கியவர் இவர். இந்தச் சின்னம்தான் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
பதவியைத் துறந்து இருந்த ஓமந்தூராருக்கு 1965-ல் இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஒரு மாகாண ஆளுநர் பதவி வழங்க முன்வந்தார். அந்தச் செய்தியை அன்றைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி டெல்லியில் இருந்து நேரில் வந்து லால்பகதூரின் விருப்பத்தைத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் ஓமந்தூரார் அந்த பேச்சு பேசாதே என்று கூறிவிட்டார்.
முதல்வராக இருந்தபோது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிகைதான் எனக்கும அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ கூடாது என்றும் வெளிநாட்டில் இருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்த எளிய அரசியல்வாதி.
அப்போது மருத்துவம் பார்ப்பதற்காக சென்னை பொது மருத்துவமனையின் டாக்டரான ரத்னவேலு சுப்பிரமணியத்தை அழைத்து வந்தனர். அவர் ஒரு சிறந்த மருத்துவர். திறமையானவர். முதலமைச்சர் இல்லத்துக்கு வந்ததும் பரிசோதிக்க ஆரம்பித்தார். அப்போது அங்கிருந்த முதலமைச்சரின் உதவியாளர் “நீங்கள் பரிசோதனை செய்யும் ஒப்பந்தத்தில் வேண்டும்” என்றார். அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இந்த நேரத்தில் இப்படி ஒரு நிபந்தனையா? என்ன தான் அந்த ஒப்பந்தத்தில் என்றார் டாக்டர். “எனக்கு சிகிச்சை அளித்த பின்னர் நீங்களோ, உங்கள் உறவினரோ யாரும் என்னிடம் சிபாரிசுக்கு வரக்கூடாது. பதவி உயர்வு சலுகையை எதிர்பார்க்க்க கூடாது. என்னிடம் அரசியல் குறித்து எதுவும் பேசக்கூடாது.” அதுதான் அந்த மூன்று நிபந்தனைகள். அதை ஏற்றுக்கொண்ட பின்னரே அவர் மருத்துவம் செய்து கொண்டார்.
பரம்பரைப் பணக்காரரும், கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரருமான குமாரசாமி ராஜாவைத் தனக்குப் பிறகு முதல்வராக்கிய கையோடு ஓமந்தூ ரார் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். சொந்த பணம் ரூ.1100-ஐ வங்கியில் இருந்து எடுத்து வரச்சொல்லி தமக்கு கார் ஓட்டியவருக்கும், சமையல்காரருக்கும் மற்ற பணியாளர்களுக்கும் அன்பளிப்பாக கொடுத்தார் ஓமந்தூரார் கடைசிக் காலங்களில் வடலூரில் உள்ள வள்ளலாரின் சமரச
சுத்த சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1970-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.
ஒழுக்கச் சீலராகவும் அஞ்சாநெஞ்சம் கொண்ட உண்மைத் தலைவராகயும் திகழ்ந்த ஓமந்தூரார் சமாதியின் மேல் 11.10.1970-ம் ஆண்டு கட்டப்பட்ட கோவி லின் திறப்பு விழா நடைபெற்றது. அக்கோவிலில் அருட்பெருஞ்ஜோதி வழிபாடு நடந்தது. இன்று வடலூரில் அவர் நிறுவிய குருகுல பள்ளி வளாகத்தில் அவரது சமாதி கோவில் இருக்கிறது.