வியாபாரிகளின் ஒருங்கிணைப்பில் 74வது குடியரசு தின விழா
74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு மற்றும் ஜி.ஏ.ரோடு சுற்று வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திமுக. மாவட்ட செயலாளர் இளைய அருணா அவர்கள், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐட்ரீம்ஸ் மூர்த்தி அவர்கள், எழுத்தாளர், சமூக ஆர்வலர் திருமதி.லதாசரவணன், மம்மி டாடி பாஸ்கரன் அவர்கள், எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு கடை உரிமையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் தமிமும் அன்சாரி, செயலாளர் தயாளன், பொருளாளர் சந்திரசேகர், துணைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒற்றுமையைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாக வெகு அருமையான அமைந்திருந்தது. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் அனைவருக்கும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. திரு.தன்ராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றியதோடு விழாவை அழகாகத் தொகுத்து வழங்கினார்.
வடக்கு மாவட்ட செயலாளர் திரு. இளைய அருணா அவர்கள், நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கியதோடு சிறப்பானதொரு வாழ்த்துரையையும் நிகழ்த்தினார்.
எழுத்தாளர், சமூக ஆர்வலர் திருமதி. லதாசரவணன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியதோடு, தன் சிறப்புரையில் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படும் வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு மற்றும் ஜி.ஏ.ரோடு வியாபாரிகளுக்கு வாழ்த்தும், கூடவே வியாபாரிகளின் கோரிக்கை மனுவையும் எம்.எல்.ஏ. முன்னிலையில் வாசித்துக் காட்டினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய இராயபுரம் எம்.எல்.ஏ. திரு. ஐட்ரீம்ஸ் மூர்த்தி அவர்கள் “எனது ஐந்து வயதில் இருந்து நான் வடசென்னையில் இருக்கிறேன். வியாபாரிகளின் உழைப்பும், வாடிக்கையாளரின் தேவையையும் நான் வெகுவாக அறிவேன். 2000 கடைகள் 2 லட்சம் கடைகளாக அதிகரிக்க ஆவனச் செய்வேன். மக்களுக்கான நலத்திட்டப் பணிகளில் நான் எப்போதும் துணை நிற்பேன். எந்த உதவியென்றாலும் தயங்காமல் என்னை வாட்ஸ்அப் மற்றும் என் அலுவலகத்தில் வந்து தொடர்பு கொள்ளலாம்” என்றதோடு, மக்களுக்காக மேற்கொண்ட நலப் பணிகளையும் அவர்கள் முன்பு தெரிவித்தார். வியாபாரிகள் சங்கம் சார்பாக அளித்த மனுவைப் பெற்றுக் கொண்டு, 74வது குடியரசு தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் அவரின் கரங்களால் வழங்கப்பட்டது. அற்புதமான இந்த விழா ராபின்சன் பார்க்கில் நடைபெற்றது. வியாபாரிகளின் நியாயமான தேவைக்கு என்றென்றும் இந்தச் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை விதைத்த தலைவர் தமிம்அன்சாரி அவர்களுக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்.
இனிய 74வது குடியரசு தின வாழ்த்துக்கள்.