74வது குடியரசு தினக் கொண்டாட்டம்
இன்று 74ஆவது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி பங்கேற்கிறார்.
குடியரசன்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்ற தேசிய கீதம் பாடப்பட்டது.
தொடர்ந்து குடியரசு தின விழா அணி வகுப்பு நடைபெற்றது. இதில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன.
தேசியக்கொடி தயாரானது எப்படி?
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பறக்கவிட மராட்டியத்தில் இருந்து சென்னை வந்தது தேசிய கொடி.
இந்த ஆண்டு குடியரசு விழாவை வெகுவிமரிசையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றபடி உழைப்பாளர் சிலை பகுதியில் பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு கொடிக் கம்பமும் உருவாக்கப்பட்டது.
சென்னையில் 74-வது குடியரசு தினம் வெகுவிமசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடற்கரை சாலையில் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு தேசியக் கொடி கோட்டையில் பறக்கவிடப்பட்டது. இந்த தேசிய கொடி ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தேசிய கொடியாகும். மராட்டிய மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இந்தக் கொடி சென்னைக்கு வரவழைக்கப்பட்டு காதி கிராமோத் யோக் பவனில் தயாராகியது.
மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்றவேண்டும். மத்திய அரசின் மராட்டிய மாநிலத்தில் உள்ள நான்டெக்மரத்து வாடாவில் காதி நிறு.வனத்தில் நான்கு இழைகளால் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகிறது.
இந்தத் தேசிய கொடிகளுக்கு என்று தனித் தனி அளவுகள் உள்ளன. கதர் வாரியம்தான் இந்தக் கொடிகளை விற்பனை செய்யும்.
அந்த வகையில் விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.
கோட்டையில் பறக்க விடப்படும் தேசியக் கொடி உள்பட அனைத்து மத்திய மாநில அரசு கங்களும் நிறுவனங்களும் காதி நிறுவனத்தில்தான் தேசிய கொடியை வாங்குவார்கள்..
கவனர் மற்றும் முதல்வர் சந்திப்பு
சட்டசபை கூட்டத்தொடரின்போது வெளியேறிய கவனரை சில நாட்களுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். கவர்னர் காலை 7.55 மனிக்கு வந்தார். அவரை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி 8 மணிக்கு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது கவர்னர் அருகில் முதல்வர் நின்று கொண்ட தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
குடியரசுக்கான சட்டம் உருவாக்குதல்
அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு நாட்டு அரசு செயல்படவேண்டிய விதிமுறைகளைக் கொண்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய காலனிய அரசு இந்திய அரசுச் சட்டம் 1935 என்ற சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் பிரிட்டிஷ் அரசு தனது ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவை நிர்வகிப்பதற்காக உருவாக்கியது. இதன் அடிப்படையில்தான் அப்போதைய ஆட்சி நடைபெற்றது.
இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கான பிரத்யேக அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்யும் அரசு அமைப்பு குடியரசு என்று அழைக்கப்படும். குடியரசாக விளங்கும் நாடு அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதாகும். எனவே, அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் நாள்தான் குடியரசு நாள் ஆகும்.