யார் இந்த ராஜகண்ணப்பன்?
ராஜ.கண்ணப்பன். தமிழ்நாட்டு அரசியலுக்கு எஸ்.கண்ணப்பனாக அறிமுகமாகி, ஜெயலலிதா வின் முதல் அமைச்சரவையில் ஒரே சமயத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அமைச்சராக இருந்து, கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்குடன் திகழ்ந்தவர்.
திடீரென தனிக் கட்சி தொடங்கி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறிமாறி பயணித்தவர். பல தேர்தல் சர்ச்சை களுடன் தொடர்புடையவர். சொத்துக்குவிப்பு வழக்குக்காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியவர்.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துறை மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கும் ராஜ. கண்ணப்பனின் கடந்த கால அரசியலை அலசு கிறது இந்தச் சிறப்புத் தொகுப்பு.
எம்ஜிஆர் காலத்திலேயே அரசியலுக்கு வந்து விட்டவர் எஸ்.கண்ணப்பன் சிவகங்கை மாவட் டத்தைச் சேர்ந்தவர். மாணவப்பருவம் முதலே எம்ஜிஆர் மீதும் பிறகு அதிமுக மீதும் ஈர்ப்பு கொண்டவர். 1991ல் தமிழ்நாடு முதலமைச்சரான ஜெயலலிதா தனது அமைச்சரவையில் கண்ணப் பனைச் சேர்த்துக்கொண்டார்.
பொதுப்பணி, மின்சாரம், நெடுஞ்சாலை என பல முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை கண்ணப்ப னுக்கு ஒதுக்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்தக் காலகட்டத்தில் அடிக்கடி அமைச்சரவை மாற்றத்தைச் செய்த ஜெயலலிதா, ஒருமுறைகூட எஸ். கண்ணப்பனை அமைச்சரவையிலிருந்து நீக்கவும் இல்லை. துறைகளைப் பறிக்கவும் இல்லை, மாற்றவும் இல்லை. மாறாக, கூடுதல் துறை களைத்தான் கண்ணப்பன் வசம் கொடுத் தார். வளம் கொழிக்கும் துறைகளை எல்லாம் கண்ணப்பனுக்கு வாரி வழங்கியிருக்கிறார் ஜெயலலிதா என்று அப்போது வியப்புடன் பார்க் கப்பட்டது.
ஆனால் 1996 தேர்தலில் அதிமுக தோற்ற பிறகு அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப் பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 11 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளைச் சேர்த் துள்ளார் என்றும், ஏராளமான கட்டடங்கள், நிலங் கள், வாகனங்களைத் தனது பெயரிலும் தன்னு டைய தாயார், மனைவி உள்ளிட்ட உறவினர் பெயர்களிலும் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. அது தொடர்பான நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார் கண்ணப்பன்.
பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல், ஊழல் வழக்கு கள் கொடுத்த நெருக்கடி, சசிகலா – நடராஜ னுடன் ஏற்பட்ட பிரச்னைகள் என பல காரணங் களால் அதிமுகவிலிருந்து வெளியேறி மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி னார் கண்ணப்பன்.
2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த கண்ணப்பனுக்கு இளையான்குடி தொகுதியை ஒதுக்கினார் திமுக தலைவர் கருணாநிதி. அதனால் அதிருப்தி யடைந்த முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடி மகன் திமுகவிலிருந்து வெளியேறினார். ஆனால் அந்தத் தேர்தலில் கண்ணப்பன் தோல்வியடைந் தார்.
பிறகு விசிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி களுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உரு வாக்கிய கண்ணப்பன், 2004 தேர்தலில் ராமநாத புரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுப் போனார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற போதும் கண்ணப்பனுக்கு தென்மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு இருந்தது. திடீரென திமுகவில் இணைந்த கண்ணப்பன், 2006 சட்ட மன்றத் தேர்தலில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அப்போது கருணாநிதி அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த கண்ணப்பனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த ராஜ.கண்ணப்பனை 2009 மக்கள வைத் தேர்தலில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிவகங்கையில் நிறுத்தினார் ஜெயலலிதா.
அந்தத் தேர்தலில் ப.சிதம்பரத்துக்குக் கடும் போட்டியைக் கொடுத்த ராஜ.கண்ணப்பன், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆனாலும் அந்தத் தேர்தல் முடிவு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்று தொடர்ச்சியாகப் போராடினார் ராஜ.கண்ணப்பன்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல் லாம் ரீகெளண்டிங் மினிஸ்டர் என்றே ப.சிதம் பரத்தை விளிப்பார். அதற்குக் காரணம், மறு எண்ணிக்கையில்தான் ராஜகண்ணப்பனை ப.சிதம்பரம் வென்றார் என்ற விமர்சனம் அப் போது இருந்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக திருப்பத்தூரில் போட்டி யிட்ட ராஜ.கண்ணப்பன் திமுகவின் பெரியகருப் பனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அந்தத் தீர்ப்பை எதிர்த்தும் நீதிமன் றத்தை நாடினார் ராஜ.கண்ணப்பன்.
தொடர்ந்து அதிமுகவில் இருந்தபோதும் அவர் எதிர்பார்த்த வாய்ப்போ, அங்கீகாரமோ கிடைக் கவில்லை. பிறகு ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு நடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உருவானபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து வெளியேறிய ராஜ.கண்ணப்பன், திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தார். ஆனால் அந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் வெளியேறிவிட்டார் கண்ணப்பன் என்று விளக் கம் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டி யிட்டு வெற்றிபெற்ற ராஜகண்ணப்பனை போக் குவரத்துத்துறை அமைச்சராக்கினார் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது ராஜகண்ணப் பன், எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு உள்ளிட்ட பலரும் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர் கள் என்றும் அவர்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றும் விமர் சனங்கள் எழுந்தன.
என்றாலும், போக்குவரத்துத்துறை என்ற முக்கி யத்துவம் வாய்ந்த துறைக்கு அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மீது அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக, தன்னைச் சந்திக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலை வர் தொல்.திருமாவளவனை பிளாஸ்டிக் நாற் காலியில் அமரவைத்துவிட்டு, கம்பீரமான நாற் காலியில் அமர்ந்துகொண்டார் அமைச்சர் கண்ணப்பன் என்ற விமர்சனம் எழுந்தது. அது சாதி ரீதியிலான பாகுபாடு என்ற சர்ச்சை யாக வும் மாறியது.
பிறகு போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கான தீபாவளி பண்டிகை இனிப்புகள் வாங்குவதற் கான டெண்டர் சர்ச்சை, உதவியாளர், காவல ரைத் தாக்கியதாக எழுந்த சர்ச்சை, போக்கு வரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புச் சோதனை, அரசு டெண்டர்களில் ராஜ. கண்ணப்பன் குடும்பத்தினரின் தலையீடு என அடுத்தடுத்து சர்ச்சைகள் அணிவகுத்தன.
அப்படியான சூழலில்தான் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரை சாதியைச் சொல்லி அவமதித்தாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையாக மாறியது. அதன் நீட்சியாக, அமைச்சர் ராஜ.கண்ணப்பனிடம் இருந்த போக் குவரத்துத் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட் டுள்ளது.
இது சர்ச்சைகளுக்கான தீர்வா, அல்லது தவறுக் கான தண்டனையா அல்லது, வழக்கமான இலாகா மாற்றமா? என்பதுதான் தற்போது எழுந் திருக்கும் முக்கியமான கேள்வி.
ஆர். முத்துகுமார், எழுத்தாளர்