அரசும் மக்களும் தெரிந்தே செய்யும் தவறுகள்
தெரிந்தே நடத்தும் தவறுகளைக் களைவதற்கு அரசுக்கும் பொதுமக்க ளுக்கும் முக்கிய தலைவர் களுக்கும் 10 கேள்விகள் :
தமிழ் இலக்கியத்தில்தான் அதிக நீதி இலக்கியங்கள் உள்ளன. ஏனென் றால் மக்கள் ஒழுங்கையும், பண்பையும், பாட்டையும் காக்கவேண்டும் என்பது நம் முன்னோர்களின் எண்ணம்.
மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்று எல்லா விஷயத்திலும் கடைப்பிடிக்கக் கூடாது.
ஒரு அரசு எவ்வளவு உண்மையாக, நேர்மையாக, சட்டத்தை மதித்து அரசாளுகிறதோ அதோபோல் தான் மக்களும் நடப்பார்கள். அரசு தெரிந்தே தவறு செய்தால் மக்களும் இது சகஜம்தான் என்று தெரிந்தே சில தவறு களைச் செய்யத் துணிவார்கள்.
தெரிந்தே நடத்தும் தவறுகளைக் களைவதற்கு அரசுக்கும் பொதுமக்களுக் கும் முக்கிய தலைவர்களுக்கும் 10 கேள்விகள்
1. பெரும்பாலும் சென்னை நகரங்களில் சாலையின் இரு பகுதியிலும் அந்தந்த வீட்டின் கார்கள் சாலையை ஒட்டி நிறுத்தி வைக்கிறார்கள். அதுவும் சிறிய கார்கள் அல்ல. பெரிய பெரிய கார்கள். அந்தச் சாலை வழியே பள்ளி மற்றும் கல்லூரி, கம்பெனிகளுக்குப் போவோர், வருவோர் இரு பக்கக் காரின் இடைவெளியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சங்கடப் படுவதைப் பார்த்திருப்போம். அவர்களும் பார்த்திருப்பார்கள். ஆனால் அந்தக் காரை போக்குவரத்து நெரிசல் நேரத்தில்கூட அப்புறப் படுத்தாமல், அலட்சியமாக, அதைப் பற்றிக் கவலைப்படாமல் அதே தவறைத் தெரிந்தே செய்வார்கள். கேட்டால் நாங்க ரோட் டாக்ஸ் கட்ரோம்ல என்பார்கள்.
2. அரசு நடத்தும் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பல வகையில் ஓடுகின்றன. மிதவைப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, ஏ.சி. பேருந்து இப்படி. இதில் பள்ளி மற்றும் பணிக்குச் செல்வோர் போகும் காலை, மாலை நேரங் களில் வரிசையாக எக்ஸ்பிரஸ் பேருந்துகளே விட்டு அதிகக் கட்டணம் வசூலிக்கிறது தமிழக அரசு. எக்ஸ்பிரஸ் பஸ் என்ன தனிச் சாலையிலா போகுகிறது. சாதாரண கட்டணம் வாங்கும் சாலையில்தான், அந்த நெருக் கடியான சாலையில்தான் போகிறது. அதே நேரத்தில்தான் போகிறது. ஆனால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற் காகவே தந்திர மாக அரசுப் பேருந்துகளை (ஏ)மாற்றிவிடுகிறதே ஏன்?
3. செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் அதற்காக அதையே தவிர்க்கவேண்டிய இடங்களில் தவிர்க்கலாம் அல்லவா? பேங்க் கவுண்டர் முன் செல்போன் பேசக்கூடாது என்பார்கள். ஆனால் சிலர் சரியாக அங்கே வந்தும் பேசிக் கொண்டே இருப்பார்கள். பேங்க்குக்கு வருகிறோம் என்று தெரிந்தும் பேனா எடுத்து வராமல் அங்கே வந்து இரவல் வாங்குவார்கள். பெட்ரோல் பங்க் முன்னால் செல்போன் பேசக்கூடாது என்பார்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சிலர் அங்கே நின்று செல்போன் பேசுவார்கள். வழியை மறித்து நின்று பேசுவது, ஏழு ஊருக்குக் கேட்பதுபோல் சத்தம் போட்டுப் பேசுவது, அமைதியான ஆலயங்களில் சத்தம் போட்டு பேசுவது தவறு என்று இவர்களுக்கு எப்போதுதான் தெரிந்து திருந்துவார்கள்?
4. அரசு நிறுவனங்களில், பேருந்து நிறுத்தங்களில், ரயில் நிலையங் களில், ஆலயங்களில் சிலர் பான்பராக் பாக்குகளைப் போட்டுவிட்டு பராக்குப் பார்த்துக்கொண்டே பிசிக் பிசிக் என்று துப்பி வைத்திருப்பதைப் பார்த்தால் அவர்களுக்கே அசிங்கமாகத் தெரியும். ஆனால் தவிர்க்க வேண்டியதைத் தவிர்க்க முடியாமல் பொது இடங்களில் அசிங்கம் செய் யும் இவர்களைத் திருத்தவே முடியவில்லை. அரசு பொது நிறுவனங் களில் கேட்கவே வேண்டாம். அங்கு சுத்தம் பண்ண ஆள் இல்லை. அப்படியே விட்டு வைத்திருப்பார்கள். நம் நாட்டின் ஒழுங்கீனத்துக்குச் சாட்டியாக. என்ன சட்டத்தைப் போட்டு இவர்களைத் திருத்துவது?
5. மனிதனின் தேவைகள் அதிகமாகிப் போனது. ஷாப்பிங் கலாச்சாரம் பெருகிவிட்டது. அதனால் கழிவுகளும் அதிகமாகிவிட்டது. ஒரு நாளைக்கு குப்பை அள்ளும் லாரி வரவில்லை என்றால் அந்தத் தெருவே குப்பைக் காடாக மாறிப்போகும். தினசரி குப்பைகளை மாநகராட்சி எடுத்தால்கூட அந்தக் குப்பைத் தொட்டியைச் சுற்றி நிரந்தரமாகக் குப்பை கள் இருந்துகொண்டேயிருக்கும். அது சில சோம்பேறிகளின் கைங்கரியம். வீட்டிலிருந்து குப்பையை எடுத்து வருவார்கள். குப்பைத் தொட்டி இருக் கும் இடத்துக்கு வந்ததும் தூர இருந்தே தூக்கி எறிவார்கள். அது கண்டிப் பாகத் தவறிக் கீழே விழும். அதை அவர்கள் வந்து எடுத்து குப்பைத் தொட்டியில் போடாமல் அலட்சியமாகத் திரும்பிப் போவார்கள். அது வெறும் குப்பையாக மட்டும் இருக்காது. கழிவுநீராகக் கூட இருக்கும். அதைக் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் எப்படி அள்ளுவார்கள் என்ற யோசனையே அவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களைத் திருத்த குப்பைத் தொட்டியை இவர்கள் வீட்டு வாயிலில் வைக்கவேண்டும்.
6. சமையல் எரிவாயு தவிர்க்கமுடியாத தேவையாகிவிட்டது. எரிவாயு தீர்ந்துவிட்டால் வீடே ரெண்டுபட்டுவிடும். கேஸ் சிலிண்டரால் முக்கிய மாக நேரச் சிக்கனம் என்பது வரப்பிரசாதம். அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் டெலிவரி மேன் களை வேலைக்கு வைத்துவிட்டு அவர்களுக்கு உரிய சம்பளம் தராமல் குறைத்து தந்துவிட்டு கேஸ் சப்ளை செய்யும் வீட்டார்களிடம் டெலிவரி மேன்கள் கூடுதலாக 12 ரூபாய் வாங்குவதைக் கண்டுகொள்வ தில்லை. பேருக்கு ரசீதில் ‘கூடுதல் பணம் கொடுக்காதீர்கள்’ என்று போட்டுவிட்டு இதே தவறைத் தொடர்ந்து டெவரி மேன்கள் செய்ய வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இவர்களை எப்படித் திருத்துவது?
7. தலைவிக்கு, தலைவருக்கு, கட்சி நிர்வாகிக்குப் பிறந்த நாள், இறந்த நாள் கொண்டாட்டங்கள் வந்துவிட்டால் போதும். இப்போது வந்திருக்கும் பிளக்ஸ் போர்டை பெரிய பெரிய அளவுகளில் செய்து மக்கள் நடக்கும் நடை பாதைகளை மறித்து வைத்துவிடுவார்கள். பாதசாரிகள் இறங்கி இறங்கி வாகனங்கள் செல்லும் பகுதியில் நடந்து பாதையைக் கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அது போதாதென்று லவுட் ஸ்பீக்கர்களை எடுத்துவந்து பாடல்களைப் போட்டு அன்று முழுக்க அப்பகுதி மக்களை நிம்மதியாக இருக்கவிடாமல் பிரஸரை ஏற்றிவிடுவார்கள். இவர்களை யார் தட்டிக்கேட்பது?
8. குப்பை குட்டி போடுமா? போடும். குப்பைத் தொட்டிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சில ‘அடக்கமுடியாத பார்ட்டிகள்’ நடு ரோடு என்ற கூச்சநாச்சம் பார்க்காமல் அப்படியே அவிழ்த்துவிடும் அசிங்கம் தான் சிறுநீர் கழித்தல். பல இடங்களில் ‘இங்கு சிறுநீர் கழிக்காதே’ என்று எழுதி வைத்திருப்பார்கள். இரவில் அதன் மேலேயே கழிப்பது சிலரின் வாடிக்கை. இவர்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?
9. ஆண்டவனுக்கு முன்னால் அனைவரும் சமம். ஆனால் ஆண்டவ னைக் காண கோயிலுக்குப் போனால் அங்கேயும் பொருள் படைத்தவ னுக்கு ஒரு வரிசை. ஏழைகளுக்கு தர்மதரிசனம் என்று ஒரு வரிசை. இந்தப் பாகுபாடு ஆலத்திற்குள் எதற்கு?
10. போக்குவரத்தை சிக்னல்தான் கட்டுப்படுத்துகிறது. சிக்னல் விளக்கு கள் இல்லையானால் எல்லாரும் ரோட்டிலேயே முட்டிக்கொண்டு பல மணி நேரம் நிற்க வேண்டியதுதான். ஆனால் அரிய கண்டு பிடிப்பான சிக்னல் விளக்கை அவசர நேரத்தில் ரொம்ப பேர் எரிச்சல் பார்வை பார்ப்பதைப் பார்க்கலாம். அதுவும் போக்குவரத்து காவலர் இல்லையா னால் அவர்கள் அடிக்கும் லூட்டி அபாரம். சிக்னல் விழுமுன் கோட் டைத் தாண்டி நிற்பது, எதிரில் வரும் வண்டிகளுக்கு வழிவிடாமல் மறித்து, ‘முடிந்தால் போய்க்கோ’ என்பதுபோல் பாவலா செய்துகொண்டே நிற்பது, போலீஸ் இல்லாத சிக்னல்களை மதிக்காமல் மற்றவர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக நடந்துகொள்வது என்பது எப்போது ஒழியுமோ?
அரசுத் துறை, காவல் துறை, நீதித் துறை, நிதித் துறை, மருத்துவத் துறை, அரசியல் துறையைச் சேர்ந்த பல புல்லுருவிகள் இப்படித்தான் தன் எல்லை மீறல்களைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். இது தமிழகத்தின் தலையெழுத்தா? மாற்றக்கூடிய எழுத்தா?