இந்தியாவில் விரைவில் வருகிறது பறக்கும் கார்

 இந்தியாவில் விரைவில் வருகிறது பறக்கும் கார்

இந்திய வாகனச் சந்தையில் மாருதி நிறுவனத்துடன் இணைந்து ஜப்பானிய நிறுவனமான சுசுகி மோட்டார் ஏறக்குறைய 50 சதவிகித இடத்தை வகிக் கிறது. அதேபோல் ஜப்பானைச் சேர்ந்த ஸ்கை டிரைவ் நிறுவனம் பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களும் பறக்கும் கார் தயாரிக்க ஒப்பந்தம் செய் திருக்கின்றன.

இரண்டு பேர் பயணிக்கக்கூடிய பறக்கும் கார் தயாரிப்பில் ஸ்கைட்ரைவ் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. இந்தப் பறக்கும் கார் மாசு வெளியிடாத தன்மை கொண்டது.

பறக்கும் கார் மாதிரியை அமெரிக்காவின் லாஸ்வேகாசில் நடந்த வாகன கண்காட்சியில் ஸ்கை டிரைவ் நிறுவனம் அறிமுகம் செய்தது. வர்த்தக ரீதியிலான தயாரிப்புக்கு முதலீடு எதிர்பார்த்திருந்த நேரத்தில் சுசுகி நிறுவ னம் ஸ்கை டிரைவ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

பறக்கும் கார் தயாரிக்கும் ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் இருசக்கர வாகனத் தயாரிப்புடன் தற்போது பறக்கும் காரையும் தயாரிக்க உள்ளது. இதனால் இந்தியாவில் பறக்கும் கார் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

பறக்கும் கார் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தால் போக்குவரத்து நெரிச லில் சிக்கவேண்டிய அவசியம் இருக்காது. செல்ல வேண்டிய இடங்களுக்கு குறித்த நேரத்தில் பறந்து செல்லலாம். மருத்துவத் தேவைகளுக்கு வரப்பிர சாதம். அவசர உதவிக்கும் மிகவும் பயன்பாடாக அமையும் என்பது கூடுதல் சிறப்பு.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...