இந்திய வீரர் vs இலங்கை வீரர் பிரம்மாண்ட குத்துச்சண்டை போட்டி சென்னையில்…

வெளிநாட்டில் நடக்கும் அதிரடி குத்துச்சண்டையை  சென்னையில் நேரில் காண ஒரு அரிய வாய்ப்பு

வீடியோவாகப் பார்த்த பிரம்மாண்டச் சண்டைக் காட்சி நேரில் காணும் வாய்ப்பு சென்னை மக்களுக்குக் கிடைத்துள்ளது.

முதன்முறையாக சர்வதேச அளவிலான பிரம்மாண்டக் குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில் நடக்கும் சர்வதேச அளவிலான முதல் குத்துச்சண்டை போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை மதுரவாயலில் உள்ள எவர்லாஸ்ட் பிரேவ் இன்டர்நேஷனலின் முதல் உலக சேம்பியன்ஷிப் போட்டி பிரம்மாண்ட உள்விளையாட்டு அரங்கில் 26-3-2022 சனிக்கிழமை மாலை நடைபெறவிருக்கிறது.

மிக எதிர்பார்ப்போடு நடக்கவிருக்கிறது இந்தக் குத்துச்சண்டை போட்டி. குத்துச்சண்டை உலகத்தில் இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. காரணம் சிங்கள குத்துச்சண்டை வீரருக்கும் தமிழக குத்துச்சண்டை வீரருக்கும் நேரடி போட்டி நடக்கவிருக்கிறது.

ஆறு சுற்றுகள் நடக்கும் இந்தப் போட்டியில் சிங்கள குத்துச்சண்டை வீரன் சூப்பர்வெல்டர் திரு. நிரஞ்சனை எதிர்த்து தமிழக குத்துச்சண்டை வீரர் திரு. பாலி சதீஷ்வர் மோத இருக்கிறார். இந்தக் குத்துச்சண்டை போட்டியில் சிங்கள வீரரை முதல் சுற்றிலேயே நாக்அவுட் செய்வேன் என்று பாலி சதீஷ்வர் சபதம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் சிங்கள வீரருடன் தமிழகத்தைச் சேர்ந்த மற்றும் இந்தியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களும் மோதவிருக்கிறார்கள்.

இதற்கான ஆன்லைன் கட்டண நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

பலகட்ட குத்துச்சண்டை போட்டிகளுக்கிடையே தமிழ்ப் பாரம்பரிய கலையான பரதம், சிலம்பாட்டம், பறை இசை, யோகம், காலடி குத்துவிரட்டு, வர்மம், ஜிம்னாஸ்டிக் போன்ற கலைகளுடன் மூன்று மணிநேரம் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில்  யூ.எப்.சி. சண்டைப் பயிற்சியாளர் பரத் கந்தாரி அவர்கள் பயிற்சியாளர் அணியிலும் சர்தேச தொழில்முறை குத்துச்சண்டை வீரரும் இந்தியாவின் தலைசிறந்த எம்.எம்.ஏ. பயிற்சி வீரருமான அபிலாஷ் ராவத் அவர்கள் இந்தப் போட்டியை நடத்தும் நடுவர் குழுவில் தலைமை வகிக்கிறார்.

மற்றும் இந்தக் கோலாகலப் போட்டியைக் காண உடனே முந்துங்கள்.

தொடர்புக்கு

எவர்லாஸ்ட் பிரேவ் இன்டர்நேஷனல், எண் 3, மேட்டுக்குப்பம் ரோடு, சீமந்தம்மன் நகர், மதுரவாயல், சென்னை-95  செல்: 7299874551

கட்டணம் ரூ.500 இருந்து ரூ. 5000 வரை.

சொன்னதை சாதித்து காட்டிய தமிழன்

புருஸ்லியின் ஒரு நொடியில் 9 குத்துகள் என்ற உலக சாதனையை முறியடித்து ஒரு  நொடியில் 13 குத்துகள்  குத்தி புதிய  உலக சாதனை  படைத்த  வீரத்தமிழன் 
பாலி சதிஷ்வர். கடந்த மாதம் பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகங்கள் முன்னிலையில் செப்டம்பர் 25ல் நாசிக்கில் நடைபெறும் சர்வதேச தொழில் முறை எம்.
எம்.ஏ குத்து சண்டை போட்டியில் நாக்அவுட் முறையில் வெற்றி பெருவேன் 
என்று கூறி இருந்தார். சொன்னதை போல தன்னை எதிர்த்து போட்டியிட்ட 
காஷ்மீரை சேர்ந்த வீரர் முனிஷ் குமாரை முதல் ரவுண்டில் நாக் அவுட் முறை
யில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

எம்.எம்.ஏ. குத்துச்சண்டை உலகின் ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான  விளையாட்டில் முதன்மையாக விளங்குகிறது. எம்.எம்.ஏ எனப்படும் மிக்ஸ்ட் 
மார்ஸியல் ஆர்ட் விளையாட்டில் உலகின் ஆபத்தான கலைகளான பாக்ஸிங், மோய்தாய், கிக்பாக்ஸிங், ஜீடோ, ஜூஜீட்சு, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் 
முக்கிய அங்கமாக உள்ளன. இந்த ஆபத்தான, முழு பலத்தை வெளிப்படுத்தும்  போட்டியில் தமிழகத்திலிருந்து முதல்முறையாகக் கலந்துகொண்டு வெற்றி 
பெற்றவர் பாலி சதீஷ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 21 ஆண்டுகளாகத் தற்காப்புக் கலை பயிற்சி செய்துவரும் பாலி 
சதீஷ்வர் பாக்ஸிங், கிக்பாக்ஸிங், ஜீடோ, மோய்தாய் போன்ற தனி விளையாட்டு களிலும் இதுவரை மாநில, தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்று 
சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

கிக் பாக்ஸிங் பெட்ரேஷன் ஆப் இந்தியா மூலமாக இந்தியாவின் மற்றும் 
தமிழகத்தின் ஒரே வீரராகவும் தேர்வாகியுள்ள திரு. பாலி சதீஷ்வர் உலக 
சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!