இலங்கையில் பஞ்சம் ஏன் ஏற்பட்டது?

 இலங்கையில் பஞ்சம் ஏன் ஏற்பட்டது?

இன துவேஷம் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கம் கட்டி சீன அரசை எதிர்த் தனர். விடுதலைப்புலிகளை அழிக்க வெளிநாடுகளிடம் அதிகக் கடன் வாங்கி விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் பேர்வழி என்கிற பெயரல் ஈழ மக்களைக் கொன்று குவித்தனர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்தே ராஜ பக்சே அரசுகள். சீனாவிடம் அமெரிக்காவிடம், இந்தியாவிடம் என மாறி மாறி கடனை வாங்கி விடுதலைப் புலிகளை அழிப்பதிலேயே செலவிட்டது. நாட்டை கவனிக்க வில்லை. தற்போது பெருத்த பொருளாதாரப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இன்று இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு கிலோ பெட்ரோல் 200 ரூபாய், ஒரு அரிசி 200 ரூபாய், ஒரு உளுந்து 300 ரூபாய். தண்ணீர் கிடைக்கவே யில்லை. இதன் காரணமாக பசியிலிருந்து உயிர் பிழைக்க பல ஈழத்தமிழர்கள் தமிழகத்துக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

போரின்போது ராஜபக்சேவுக்கு ஆதரவாக நின்ற சிங்களவர்களே இன்று ராஜ பக்சேவைப் பதவி விலகச் சொல்லி போராட்டம் நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

அதேபோல் ரஷியாவும் உக்ரைனும் சண்டையிட்டு வருகின்றன. உக்ரைன் நாட்டு மக்கள் இப்போதே அகதிகளாக வேறு நாடுகளுக்குப் பஞ்சம் பிழைக்க போகின் றனர். எதிர்காலத்தில் ரஷியாவும் உக்ரைனும் பஞ்சத்தால் பாதிக்கப் படப்போவது உறுதி என்றபோதும் இரு நாட்டு தலைவர்களும் தங்கள் ஈகோவை வெளிக் காட்டிக் கொள்வதற்காக அப்பாவி மக்களைப் பழிவாங்கு வது என்ன நியாயம்?

இந்த நேரத்தில் பஞ்சங்கள் எவ்வளவு கொடுமையானது என்பது பற்றித் தெரிந்து கொள்ள தமிழகத்தில் ஏற்பட்ட துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர்ப் பஞ்சம், ஒரிஸ்ஸா பஞ்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

தாதுப் பஞ்சம்

தமிழகத்தில் பல்வேறு பஞ்சங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் முக்கியமானது 1876ம் ஆண்டின் தாது வருஷப் பஞ்சம். இன்னொரு பஞ்சம் 1896ல் தமிழகத்தைத் தாக்கியது. இந்தப் பஞ்சங்களுக்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர்களின் அடக்கு முறை கொண்ட ஆட்சி முறையே.

கிழக்கிந்தியக் கம்பெனிதான் சென்னை நகரை உருவாக்கியதென்பது நாம் அறிந் ததே. அதன் ஆட்சியில் 1640ல் தொடங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கின.

துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர்ப் பஞ்சம், ஒரிஸ்ஸா பஞ்சம் என்று பஞ்சங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் உயிர் களை இந்தப் பஞ்சங்கள் காவு வாங்கின.

சிப்பாய் புரட்சிக்குப் பின் சென்னை மாகாணம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. கடுமையான நில வரிவிதிப்பு, விளைந்த பயிர்களை இங்கிலாந்துக்கு ஏற்று மதி செய்தல் என உணவு உற்பத்தி பிரிட்டிஷ் ஆட்சியால் நெருக்கடிக்கு உள்ளாக் கப்பட்டது.

தக்காணப் பீடபூமிப் பகுதிகளான இன்றைய தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகளின் மக்கள் தாது வருஷப் பஞ்சத்தால் பாதிக்கப் பட்டனர்.
வறட்சி ஏற்பட்டபோது மக்கள் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. ஆயினும்கூட தானிய ஏற்றுமதியை ஆங்கிலேயர்கள் நிறுத்த வில்லை. கப்பல் கப்பலாக கோதுமையும் பருத்தியும் உணவுப் பொருட்களும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தன.

பஞ்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தானியங்களின் சிறு வணிகத்தை முற்றி லும் தடைசெய்து, ஏகபோக விற்பனை உரிமையைத் தனதாக்கிக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. வரி செலுத்த முடியாதவர்களின் ஆடு, மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தத்தளித்தனர். விவசாயம் பொய்த் துப் போக, உள்ளூர் சந்தைகளில் தானியங்களின் வரத்து முற்றிலுமாக நின்று போனது.

பெருமுதலாளிகள் ஆங்கிலேயரின் உதவியுடன் வடமாகாணங்களில் இருந்து தொடர்வண்டிகளிலும், பர்மாவிலிருந்து கப்பல்களிலும் தானியங்களை கொண்டு வந்து இறக்கினர். ஆனால் அவற்றைப் பதுக்கி கள்ளச்சந்தையில் மூன்று, நான்கு மடங்கு விலையில் விற்று கொள்ளை அடித்தனர்.

பஞ்சகாலத்தில் மக்கள் வேலை வாய்ப்பினை முழுதாக இழந்தனர். வருமான மற்ற நிலையில் நகைகள், பாத்திரங்கள், ஆடு, மாடுகள், துணிகள், வீட்டுக் கதவு, ஜன்னல்கள் என்று அனைத்தையும் விற்று உணவு உண்டனர். பணம் கரைந்ததும் நாடோடி வாழ்க்கை வாழும் நிலைக்குப் பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டனர்.
வேலை பெறுவதற்காக மக்கள் கிராமங்களை காலி செய்து நடைப் பயண மாகப் பெருநகரங்களை நோக்கிச் சென்றனர். கொடிய வெப்பத்தில் உணவும் நீரும் இன்றி, நெடு நாட்கள் நடந்ததால் வயதானவர்களும், குழந்தைகளும் பாதி வழி யிலே ஆங்காங்கே விழுந்து இறந்தனர்.

‘கீழே கிடந்த ஓர் எலும்புத்துண்டை நாய் கவ்விக்கொண்டு ஓடுவதை மக்கள் காண்கிறார்கள். உடனே அந்த நாயைத் துரத்திக் கொன்று ஒரு துண்டு எலும்புக் காக அடித்துக்கொண்டார்கள்’ என்று அன்றைய நிலையைப் பதிவு செய்த ஓர் அறிக்கை கூறுகிறது.

மக்கள் எறும்புப் புற்றுகளைத் தேடி அதிலிருந்து தானியங்களை எடுத்து உண்ப தைக் கண்டதாக அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மெக்குகே கூறி இருக்கிறார்.

ஊர்வன, பறப்பன என அனைத்தையும் மக்கள் உண்ணத் தொடங்கினர். வயிற் றைப் புண்ணாக்கி எரிச்சல் ஏற்படுத்தும் காட்டுக் கிழங்குகளைக்கூட விட்டு வைக்கவில்லை. பழக்கமில்லாத உணவினாலும், சில நச்சுள்ள காய், கொட்டை, கிழங்குகளை உண்டதாலும் பலர் நோயுற்று இறந்தனர். பசியால் மக்கள் எலும்பும் தோலுமாகி கொத்துக் கொத்தாகச் செத்து மடிந் தனர்.

எப்படியாவது உயிர் பிழைத்தாக வேண்டும் என்று நினைத்தவர்கள் இலங்கை, பிஜி, பர்மா, தென்னாப்பிரிக்கா என்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கொத் தடிமை முறையில் சேவகத்துக்குப் போனார்கள்.

இப்பஞ்சம் தாக்கிய வருடங்களில் சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்துக் கும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.

இந்தப் பஞ்சத்தில் மடிந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. ஆயினும், இந்தப் பஞ்சம் பற்றி ஆய்வு மேற் கொண்ட ஆய்வாளர், டேவிட் அர்னால்ட் கொடுக்கும் தகவல்படி இறந்தவர் களின் எண்ணிக்கை 35 லட்சம் பேர்.

பசியால் வாடிய மக்களில் சிலர் வெள்ளைக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களின் தானியக் கிடங்குகளைச் சூறையாடி பகிர்ந்துகொண்டனர். சந்தைகளில் பூட்டி யிருந்த கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

பசியின் கொடுமை தாளாமல் சிறுவர்களும் பெரியவர்களும் பல இடங்களில் வன்முறையுடன் கூடிய கொள்ளைகளில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கை பாது காப்பது பல இடங்களில் ஆங்கிலேய அரசிற்குப் பெரும் சிக்கலானது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் லைட்டன் பிறப்பித்த உத்தரவின் பேரில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை களின் அடிப்படையில் பஞ்சநிவாரண நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டன.

ஆங்காங்கே வேலைத் திட்டங்களைச் செயல்படுத்த முன்வந்தனர். பல இடங் களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளையும் சாலைகள் அமைக்கும் பணி களையும் ஏற்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முயன்றனர். வேலை செய்தவர்களுக்குக் கூலியாக ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது.

இன்றும் சென்னையின் ஒரு சில இடங்கள் பஞ்சங்களை நினைவுகூரும் அடையாளங்களாகத் திகழ்வதைக் காணலாம்.

பக்கிங்ஹாம் கால்வாய் ஒரு முக்கிய அடையாளம். இந்தக் கால்வாய், தாது வருடப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது.

பல ஆண்டுகள் இக்கால்வாய் போக்குவரவுக்குப் பயன்பட்டது. வீடுகளின் பெருக் கத்தாலும், தொழிற்சாலைகளாலும் இந்தக் கால்வாய் இன்று சாக்கடையாகச் சுருங்கி விட்டது.

ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும்போது ‘சாப்பிட்டாச்சா’ என்று நாம் கேட்டுக்கொள்கிறோமே இந்த வழக்கம் ஆரம்பித்தது பஞ்ச காலத்தில்தான் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

மூலவன்

1 Comment

  • தெரிந்துகொள்ள வேண்டிய பஞ்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...