வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 06)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 6 கிரிகோரியன் ஆண்டின் 96 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 97 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 269 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.
1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார்.
1385 – போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார்.
1453 – இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார்.
1580 – இங்கிலாந்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1652 – நன்னம்பிக்கை முனையில், டச்சு மாலுமி யான் வான் ரைபீக் கேப் டவுன் எனப் பின்னர் அழைக்கப்பட்ட நகரை உருவாக்கினார்.
1712 – நியூயார்க்கில் அடிமைகள் கிளர்ச்சி ஆரம்பமானது.
1782 – தாய்லாந்து மன்னர் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் இராமா மன்னராக முடி சூடினார். சக்ரி வம்ச ஆட்சி ஆரம்பமானது. இந்நாள் சக்ரி நாள் என நினைவுகூரப்படுகிறது.
1793 – பிரெஞ்சுப் புரட்சி: பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு பிரெஞ்சுக் குடியரசின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது.
1812 – பிரித்தானியப் படைகள் வெலிங்டன் பிரபுவின் தலைமையில் படாயோசு கோட்டையைத் தாக்கின.
1814 – பிரான்சின் பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் ராபர்ட் ஈ. லீ தலைமையில் தமது கடைசிச் சமரை வடக்கு வர்ஜீனியாவில் நடத்தினர்.
1869 – செலுலாயிடு கண்டுபிடிக்கப்பட்டது.
1895 – ஆஸ்கார் வைல்டு இலண்டனில் கைது செய்யப்பட்டார்.
1896 – 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.
1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனி மீது போரை அறிவித்தது.
1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.
1930 – மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்து வைத்து, கையளவு உப்பை எடுத்து “இதனுடன், நான் ஆங்கிலேயப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்”, என அறிவித்தார்.
1936 – ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் உயிரிழந்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா (யுகோசிலாவியப் படையெடுப்பு) மற்றும் கிரேக்கத்தை (கிரீசு சண்டை) நாட்சி ஜெர்மனி முற்றுகையிட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சாரயேவோ செருமனிய, குரோவாசியப் படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1965 – முதல் தடவையாக புவியிணக்கச் சுற்றுப்பாதையில் இணைக்கப்பட்ட வணிகரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்டெல்சாட் I ஏவப்பட்டது.
1968 – அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.
1973 – பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1979 – நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்டம் ஆரம்பமானது.
1984 – கமரூனின் குடியரசுப் படை பவுல் பியா அரசைக் கவிழ்க்க எடுத்த இராணுவப் புரட்சி முயற்சி தோல்வியடைந்தது.
1992 – பொசுனியப் போர் ஆரம்பமானது.
1994 – ருவாண்டா மற்றும் புருண்டி அரசுத்தலைவர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டா இனப்படுகொலைகள் ஆரம்பமானது.
1998 – அணுகுண்டு சோதனை: இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாக்கித்தான் சோதித்தது.
2005 – குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அரசுத்தலைவர் ஆனார்.
2009 – இத்தாலியில் ஆக்கிலா பகுதியில் 6.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 307 பேர் உயிரிழந்தனர்.
2010 – இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் தந்தேவாடாவில் மாவோயிசப் போராளிகள் 76 மத்திய சேமக் காவல் படை அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.
2012 – அசவாத் மாலியில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது.
2018 – கனடா, சஸ்காச்சுவான் நகரில் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1483 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520)
1815 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1876)
1901 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய செயற்பாட்டாளர் (இ. 1925)
1909 – ராம. அழகப்பச் செட்டியார், தமிழகத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1957)
1928 – ஜேம்ஸ் டூயி வாட்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
1931 – சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (இ. 2014)
1933 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (இ. 2016)
1938 – கோ. நம்மாழ்வார், தமிழக இயற்கை ஆர்வலர் (இ. 2013)
1950 – கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி (இ. 2015)
1956 – திலீப் வெங்சர்கார், இந்தியத் துடுப்பாளர்
1963 – ராஃபாயெல் கொறேயா, எக்குவதோரின் 54வது அரசுத்தலைவர்
1964 – டேவிட் வூடார்ட், அமெரிக்க எழுத்தாளர், இசைக்கலைஞர்
1973 – பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (பி. 1157)
1520 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (பி. 1483)
1528 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (பி. 1471)
1829 – நீல்சு என்றிக்கு ஏபெல், நோர்வே கணிதவியலாளர் (பி. 1802)
1961 – ஜூல்ஸ் போர்டெட், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய மருத்துவர் (பி. 1870)
1963 – ஆட்டோ சுத்ரூவ, உக்ரைனிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1897)
1971 – இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, உருசிய-அமெரிக்க இசையமைப்பாளர் (பி. 1882)
1974 – விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே, இந்துத்துவவாதி (பி. 1910)
1984 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1915)
1992 – இல. செ. கந்தசாமி, தமிழகத் தமிழறிஞர், இதழாளர் (பி. 1939)
1992 – ஐசாக் அசிமோவ், அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1920)
2001 – தேவிலால், இந்திய அரசியல்வாதி (பி. 1914)
2008 – ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, இலங்கை அரசியல்வாதி (பி. 1953)
2011 – கல்பகம் சுவாமிநாதன், தமிழக வீணை இசைக்கலைஞர், கல்வியாளர் (பி. 1922)
2011 – சுஜாதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1952)

சிறப்பு நாள்

அபிவிருத்திக்கும் அமைதிக்குமான பன்னாட்டு விளையாட்டு நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!