சங்கடம் போக்கும் சப்த அம்மன் திருத்தலங்கள்

 சங்கடம் போக்கும் சப்த அம்மன் திருத்தலங்கள்

அன்னை ஆதிபராசக்தி உலக மக்களுக்கு அருள்புரிவதற்காகவே பல வடிவங்களும், பல பெயர்கள்கொண்டு கோயில் கொண்டிருக்கிறார். புண்ணிய பூமியான நம் நாட்டில் எண்ணற்ற அம்மன் திருத்தலங்கள் அமை ந்திருக்கின்றன. இதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்…

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் வழிபட்டால், சகல ஐஸ்வ ரியங்களும் கிடைக்கும். திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும்.

காஞ்சி காமாட்சி அம்மன்
அன்னை காமாட்சி நம்முடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவள். கமாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் இருந்துவந்த தொந்தரவுகள் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கி விட்டு வந்தால் சகல நலன்களும் உண்டாகும்.

இருக்கன்குடி மாரியம்மன்
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மனை வழிபட் டால், தீராத வயிற்றுவலி, கைகால் வலி ஆகியவை குணமாகும். கண்நோய் உள்ளோர்கள் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது என்பதும் நம்பிக்கை.

சமயபுரம் மாரியம்மன்
திருச்சிராப்பள்ளியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது சமயபுரம் மாரி யம்மன் கோயில். ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, ‘மகமாயி என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோயி ல் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டுச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

வெக்காளி அம்மன்
வெக்காளிஅம்மன், பக்தியுடன் வேண்டுவோரது குறைகளைத் தீர்ப்பவள்; தீயவர்களிடம் வெம்மை காட்டி அவர்களை அழிப்பவள்; பக்தர்களிடம் தாய்க்குத்தாயாக, சேய்க்குசேயாக இருப்பவள்; வெக்காளி அம்மனை வெள் ளிக் கிழமைகளில் மனதார வழிபட்டு, அர்ச்சனை செய்தால் குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற பல நன்மை கள் கிடைக்கும்.

வாராஹி அம்மன்
வாராஹி அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் பஞ்சனி திதிகளில் விரலிமஞ்சள் மாலையை சமர்ப்பித்து, அர்ச்சனை செய்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. வாராஹியை 16 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி, முழுமனதோடு வழிபட்டால் எல்லா வகையிலும் வெற்றி கிட்டும்

துர்க்கை அம்மன்
துர்க்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரியவள். ஒருவருக்கு ராகு தசையோ அல்லது ராகு புத்தியோ நடைபெறும்போது, துர்க்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், ராகுவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...