பாடகர் சித் ஶ்ரீராம் குரலும் பாடல்களும்

 பாடகர் சித் ஶ்ரீராம் குரலும் பாடல்களும்

திரைப்பட, கர்நாடக இசைப் பாடகர் சித் ஶ்ரீராம் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா விலுள்ள கலிபோர்னியாவில் வளர்ந்தவர்.  இவருக்கு ஒரு வயதாக இருந்த பொழுது இவரது பெற்றோர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் சென்
றனர்.

ப்ரிமவுண்ட்டில் வளர்ந்த இவரின் இசைத்திறமை இவரது தாயாரால் பேணி வளர்க்கப்பட்டது. இவரது தாயார் லதா ஸ்ரீராம் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஒரு கர்நாடக இசை ஆசிரியர்.  இவர் அதே நேரத்தில் ரிதம் அண்ட் புளூஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்தார். 2008ஆம் ஆண்டில் மிசன் சான் ஜோஸ் உயர்நிலைப் பள்ளியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பெர்க்லி இசைக் கல்லூரியில் சேர்ந்து இசைத் தயாரிப்பு மற்றும் இசைப் பொறியியலில் பட்டம் பெற்றார். 

தனது கல்லூரிக் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக இந்தியாவிற்கு வந்து டிசம்பர் மாத மார்கழி உற்சவங்களில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் கலந்துகொண்டு வந்தார். தன் தாய் லதா ஶ்ரீராமிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றவர். Berkeley College of Musicஇல் இசையுடன் தொடர்புடைய பட்டம் பெற்றவர்.

அவர் அமெரிக் காவில் படித்தவர் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அங்கே மேற்கத்திய இசை, பாப் இசை கற்க வசதியுள்ளது. மேலும் குரலை மெருகேற்றும் ‘Voice Culture ’ அங்கு சொல்லிக்கொடுப்பார்கள். (இவ்வசதி தென்னாட்டில் இல்லை) தற்போது சென்னையில் வசிப்பவர். சென்னையில் வசித்தாலும் வானத்தில் பறந்து பறந்து பாடிக்கொண்டிருக்கும் வானம்பாடி.

சித் ஶ்ரீராம் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் பாடும் திறன் பெற்றவர். தனது குரலை மிகவும் லாகவமாகக் கையாளும் திறன் கொண்டவர். தனது குரலை மந்திரஸ்தாயி (மெலிவு மண்டிலம்),  மத்யஸ்தாயி (சமன் மண்டி லம்) மற்றும் தாரஸ்தாயி (வலிவு மண்டிலம்) ஆகிய மூன்று ஸ்தாயிகளிலும் நிறுத்திப் பாடக்கூடியவர். அதனாலேயே இவரது பாடல்கள் பாராட்டப்படுகின்றன.

2013ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த சித் ஸ்ரீராம் முதல் முத லில் பாடிய ‘கடல்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அடியே’ பாடலைப் பாடிய பிறகு புகழின் உச்சத்திற்குச் சென்றார். 2015ஆம் ஆண்டு விக்ரம் நடித்து, சங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படத் தில் இடம் பெற்ற ‘என்னோடு நீ இருந்தால்’ பாடலுக்காகத் தமிழில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.

‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘தள்ளிப் போகாதே’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் இடம் பெற்ற ‘மறு வார்த்தை பேசாதே’, ‘நின்னு கோரி’ படத்தில் இடம் பெற்ற ‘அடிக்க அடிக்க’ போன்றவை மிகவும் பிரபலமானவையாகும். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரைப்படங்களின் பாடல்களைப் பாடி பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தமிழில் இவரின் மாஸ்டர் பீஸ் ‘விஸ்வாசம்’ படத்தில் D.இமான் இசையமைப் பில் பாடிய “கண்ணான கண்ணே, கண்ணான கண்ணே!’ என்ற பாடல். இப்பாடல் பட்டி தொட்டி எல்லாம் முழங்கி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாலாட்டும் பாடல்.

சிங்கப்பூரில் தொடர் வெற்றிகளை கொடுத்த Noise and Grains-ன் புதிய பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில்

தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாகும் படங்களில் கண்டிப்பாக ஒரு பாடல் இவரது கணீர் குரலுக்காக வழங்கப்படுவது ஒரு சம்பிர தாயமாகவே மாறிவிட்டது. சமீபத்திய உதாரணம் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘பார்வ கர்ப்பூர தீபமா ஸ்ரீவள்ளி’ பாடல்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...