இன்றைய ராசி பலன்கள் – 19.02.2022

 இன்றைய ராசி பலன்கள் – 19.02.2022

ராசி- பலன்கள்

மேஷம்

நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் உறவுகள் மேம்படும். நபர்களின் தன்மையை அறிந்து பொறுப்புகளை ஒப்படைப்பது நல்லது. மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவங்கள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : உறவுகள் மேம்படும்.
பரணி : கட்டுப்பாடுகள் குறையும்.
கிருத்திகை : அனுபவங்கள் பிறக்கும்.
—————————————

ரிஷபம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருப்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : இலக்குகள் பிறக்கும்.
மிருகசீரிஷம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
—————————————

மிதுனம்

புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விவசாயப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். பெண்களுக்கு சுபகாரியம் தொடர்பான புதிய முயற்சிகள் கைகூடும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : தேடல்கள் அதிகரிக்கும்.
திருவாதிரை : இன்னல்கள் குறையும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
—————————————

கடகம்

உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வீர, தீரமான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். பெண்கள் பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. தைரியத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
—————————————

சிம்மம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பேச்சுத்திறமைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். பெண்கள் மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் வருவாய் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : எண்ணங்கள் கைகூடும்.
பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரம் : கலகலப்பான நாள்.
—————————————

கன்னி
பிப்ரவரி 19, 2022

உத்தியோக பணிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எண்ணங்களில் சில மாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். செயல்திறனில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் வெளிப்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் காணப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
அஸ்தம் : மந்தமான நாள்.
சித்திரை : விரயங்கள் உண்டாகும்.
—————————————

துலாம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.
சுவாதி : குழப்பமான நாள்.
விசாகம் : புரிதல் ஏற்படும்.
—————————————

விருச்சிகம்

வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் உண்டாகும். எடுத்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆசைகள் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

விசாகம் : லாபம் மேம்படும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : இன்னல்கள் குறையும்.
—————————————

தனுசு

வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற மனநிலைகள் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். சுபமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : முயற்சிகள் மேம்படும்.
பூராடம் : சுதந்திரம் கிடைக்கும்.
உத்திராடம் : தடைகள் குறையும்.
—————————————

மகரம்
பிப்ரவரி 19, 2022

எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : இழுபறிகள் குறையும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
—————————————

கும்பம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். கால்நடைகளில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். கடன் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரட்டாதி : சோர்வான நாள்.
—————————————

மீனம்

கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். மக்கள் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு மேம்படும். உத்தியோக பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
உத்திரட்டாதி : ஆதரவு மேம்படும்.
ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.
—————————————

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...