வெற்றியைத் தீர்மானிக்கும் 5 லட்சம் புதிய வாக்காளர்கள்

 வெற்றியைத் தீர்மானிக்கும்                   5 லட்சம் புதிய வாக்காளர்கள்

சென்னையில் முதல்முறையாக ஓட்டுப்போடுவதற்கு 5 லட்சம் இளைஞர்கள், இளைஞிகள் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் தீர்மானிக்கும் வேட்பாளர்கள் தான் வெற்றி வாய்ப்பை பெறுவார்கள் என்கிற கணிப்பும் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 61 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இவர்களில் 5 லட்சம் இளை ஞர்கள் முதல்முறையாக ஓட்டுப் போடுவதற்குத் தயாராக உள்ளனர். ஏற் கெனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படுவதால் முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வமாக உள்ளனர்.

இந்தப் புதிய வாக்காளர்கள் அனைவருமே புது முகங்கள் கவுன்சிலர்களாக வர வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த மாநகராட் சித் தேர்தல் குறித்து சில புதிய வாக்காளரிடம் பேசினோம்.

வடபழனியைச் சேர்ந்த முருகன், “வேட்பாளர்கள் அதிகளவில் துண்டறிக்கை களைக் கொடுத்து நான் அதைச் செய்கிறேன். இதைச் செய்கிறேன் என்கிறார்கள். உண்மையில் ஆளுங்கட்சி செல்வாக்குள்ளவர்களுடன் இணக்கமாக இருந்தால் தான் எந்தத் திட்டத்தையும் இவர்களால் செய்யமுடியும். சுயேட்சையாகப் போட்டிப் போட்டுவிட்டு ஆளுங்கட்சியுடன் சேர்ந்துவிடுகிறவர்களும் உண்டு. இதையெல்லாம் பார்க்கும்போது வெறுப்புதான் வருகிறது. பிரசாரம் முடிந்து ஒருநாள் இடைவெளியில் பணப்பட்டுவாடாதான் அதிகமாக நடக்கும். அதைக் கட்டுப்படுத்தினால்தான் உண்மையான தேர்தல்.”

சென்னையைச் சேர்ந்த கவிதா என்பவர் பேசும்போது, “இந்த வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் டீ ஆத்துவதும், துணி தோய்ப்பதும், கறி வெட்டுவதையும் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. ஒவ்வொரு தெருவுக்கும் மேள தாளத்துடன் வந்து சத்தம் அதிகமாகப் போட்டு மக்களுக்குத் துண்டு போட்டு அனைவரையும் அரசியல்வாதியாக மாற்றிவிடுகிறார்கள். இதையெல்லாம் தடை செய்யவேண்டும். மக்களிடம் இந்த மாதிரி ஓட்டு வேட்டை நடத்தாமல் ஒரு பொது இடத்தில் அல்லது டி.வி.யில் பிரசாரம் செய்துவிட்டு தேர்தல் நடத்தவேண்டும். அதுதான் சரியாக இருக்கும்” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...