வெளியில் தெரியாத நல்ல மனிதர்

 வெளியில் தெரியாத நல்ல மனிதர்

லட்சுமிகாந்தன் பாரதி என்ற ஒரு மாமனிதரைப் பற்றி எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பணியில் அம்பேத்க ருடன் அக்குழுவில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்றவர் தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர், சுதந்திரப் போராட்டத் தியாகி கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் பழுத்த காங்கிரஸ்காரர். பின்னாளில் அவரும் அவரது மனைவியும் ஒரே நேரத்தில் தமிழக மேலவை உறுப்பினராக இருந்தது நிறைய பேருக்குத் தெரிந்திருக்காது. இந்தத் தம்பதியரின் மகன்தான் லட்சுமிகாந்தன் பாரதி.

இவரும் தந்தையைப் போன்றே சிறந்த படிப்பாளி. கல்லூரி நாட்களில் போராட் டக்காரர். தமிழ்நாடு அரசுப் பணியில் வணிகவரி அதிகாரியாய்ச் சேர்ந்து பணி உயர்வில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாய் மதுரை மாவட்ட ஆட்சியராக வும் பணிபுரிந்து, கலைஞர் முதல்வராக இருந்தபோது அவருக்கு உதவியாள ராகவும் பணிபுரிந் துள்ளார்.

காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவராகையால் எப்போதும் கதர் வேட்டி கதர்ச் சட்டைதான் அணிந்திருப்பார். இவர் காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த வராயினும், கலைஞர் அவரின் நேர்மையையும் பணியில் காட்டும் சின்சியா ரிட்டியையும் கருத்தில்கொண்டு தனது பி.ஏ.வாக வைத்திருந்தார். கலைஞரின் பி.ஏ.வாக இருந்த காரணத்தினாலேயே எம்.ஜி.ஆர். ஆட்சியில் முக்கியத்துவ மற்ற Warehousing Corporation-ல் M.D.ஆக போட்டார்.

கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த இவரை C.M. Cell Coordinatorஆகப் பணியமர்த்தி மக்களுக்குச் சேவை செய்யப் பணித்தார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இவரை திருச்சி பேருந்து நிலையத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வயது மூப்பின் காரணமாக (அப்போது 87 வயதிருக்கும் (ஒரு ஆண்டுக்கு முன்னால்) மிகுந்து தளர்ந்துபோய் தடுமாற்றத் துடன் காணப்பட்டார். அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “அய்யா தற்போது என்ன செய்து கொண் டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு திருச்செங் கோட்டில் ஏதோ ஒரு ஆசிரமத்தின் பெயரைச் சொல்லி அதனைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் எனச் சொன்னார்.

தள்ளாத வயதில் ஏதோ ஓர் ஆசிரமத்தில் தங்கி பணிபுரிந்து கொண்டிருப்ப தாகக் கேள்விப்பட்டேன். தன்னலம் கருதாது பிறருக்கென உழைக்கும் இந்த மாதிரி நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதே பலருக்குத் தெரிந்திருக் காது. இவர் C.M. Cell Coordinatorஆகப் பணிபுரிந்த காலத்தில் எத்தனையோ குடும்பங்களில் ஒளிவிளக்கேற்றியுள்ளார். இதற்கு உதாரணமாக எனது மைத்துனர் குடும்பத் திற்கு அவர் செய்த உதவியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

கல்லூரிக் கல்வித் துறையில் பணியாற்றிய எனது மைத்துனர் சில காரணங் களால் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவ்வமையம் மனஉளைச்சல் காரணமாய் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணமடைந்துவிட்டார். அவரது மனைவிக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி கிடைப்பதற்கு முயற்சி செய்கையில், அவரது கணவர் இறக்கும்போது அரசுப் பணியில் இல்லாததால் பணி வழங்க இயலாது என அரசு தரப்பில் கூறப்பட்டு அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.

பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர், மேல்முறையீடு செய்து அது நிலுவை யில் இருக்கும்பட்சத்தில் இறந்துபோனால் அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும் என்ற ஒரு நீதிமன்றத் தீர்ப்பு உள்ளதை அப்போது C.M. Cell Coordinatorஆக இருந்த திரு. லட்சுமிகாந்தன் பாரதியார் அவர்களிடம் எடுத்துக் கூறி அவரது கருணை மனுவை மீளப் பரிசீலிக்கும்படி வேண்டினேன். எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உடனே நடவடிக்கை எடுத்து எனது மைத்துனரின் மனைவிக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி கிடைக்கச் செய்தார்.

அந்த நல்ல உள்ளம்கொண்ட மாமனிதரைப் பற்றி விகடன் இதழில் வந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.

  • விவேகானந்தன்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...