‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ படத்துக்குத் தடை விதிக்க முடியாது! -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
இந்தியா சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டுக்குள்ளாகவே தேசத்தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே கொலை செய்தார். இந்தக் கொலைக்குப் பின்னால் பல சதித்திட்டங்கள் மற்றும் அமைப்புகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோட்சேவை ஹீரோவாக்கும் வேலை வட இந்தியாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி ஓ.டி.டி.யில் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் தொடர்பான திரைப்படம் வெளியாக இருந்தது. இந்தப் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் கண்டனம் தெரி வித்திருந்தது.
சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டுக்குள்ளாகவே தேசத்தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னால் பல சதித்திட்டங்கள் மற்றும் அமைப்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலை யில் கடந்த சில ஆண்டுகளாக கோட்சேவை ஹீரோவாக்கும் வேலை வட இந்தியாவில் நடந்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளி யாகியிருந்தது. இதில் காந்தியைக் கொன்ற கோட்சே, நீதிமன்றத்தில் தன்னுடைய தரப்பு நியாயங்களைப் பேசுவதாகக் காட்டப்பட்டிருந்தது. அன்று முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் இப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
இப்படத்தில் நடித்துள்ள அமல் ராம்சிங் கோலே தற்போது தேசியவதாக காங் கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக இருக்கிறார். ஏற்கெனவே மராத்தி தொடரான ‘ராஜா சிவ்சத்ரபதி’யில் சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர்.
1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்சே மகாத்மா காந்தி யைச் சுட்டுக் கொலை செய்தார். கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததை அடிப்படையாகக்கொண்டு அவரது சகோதரர் கோபால் கோட்சே எழுதிய புத்தகம் தான் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ (Why I Killed Gandhi?). தற்போது இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அசோக் தியாகி இயக்கியுள்ள ‘ஒய் ஐ கில்டு காந்தி’ என்ற ஆவணப் படம் ஒன்று லைம்லைட் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 30 அன்று வெளியாக இருந்தது.
அப்போது மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா காங் கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காந்திஜியைக் கொன்றவரை ஹீரோவாகக் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காந்திஜியும் மற்றும் அவருடைய கொள்கைகளும் உலகளவில் கொண்டாடப்படுகின்றன. காங்கிரஸ் இப்படத்தை முற்றிலுமாக எதிர்க்கிறது. இப்படம் மகாராஷ்டிராவில் வெளியாவதை அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் உத்தர் தாக்கரேவிடம் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப் பட்டுள்ளது.
இது தவிர சமூக வலைதளங்களிலும் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று குரலெழுப்பி வந்தனர்.
ஜனவரி 23-ஆம் தேதி ஆல் இந்தியன் சினி ஒர்க்கர்ஸ் அசோசியேசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் “இந்தப் படத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்” என கோரி இருந்தது. அதன் மேல் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. 45 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படத்தின் நோக்கமும், இந்தப் படத்தில் சொல்லப்படும் செய்திகளும் எந்தவிதத்திலும் சமகால சமூகத்திற்கு நன்மை செய்யப் போவதில்லை. அதேநேரம் பிரிவினை யைத் தூண்டுவதற்கான அதிக வாய்ப்புள்ளது. இதனை மனதில்கொண்டு படத்தைத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதனை விசாரித்த நீதிமன்றம், படத்தைத் தடை செய்ய மறுத்ததோடு, ஆர்டிகிள் 226-ன் கீழ் உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கேட்டுக் கொண்டுள்ளது.