கல் உடைக்கும் தொழிலாளி மகள் டாக்டர் ஆகிறார்
அரசுப் பள்ளியில் படித்த கல் உடைக்கும் தொழிலாளி மகள் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் டாக்டர் ஆகிறார்.
வேலூர் மாவட்டம், பெண்ணாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா. இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மாற்றுத்திறனாளியான 17 வயது மகள் சத்யா பெண்ணாத்தூர் அரசு மேல்நைலப்பள்ளியில் படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவி சத்யாவின் பெற்றோரைச் சந்தித்து மாணவி சத்யாயின் பள்ளிப் படிப்புச் செலவை தாங்களே ஏற்றுக் கொள்வதாகக் கூறி படிக்க வைக்கச் சம்மதம் பெற்றனர்.
தொடர்ந்து நடந்து முடிந்த பிளஸ்2 பொதுத் தேர்வில் மாணவி 600க்கு 532 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுதது நீட் தேர்வில் பங்கேற்று 720க்கு 119 கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்றார். அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்றவர் களுக்குத் தமிழக அரசின் 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் சீட் வழங்கப்பட உள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் மாவட்டத்தில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதல் மாணவியாக மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த முதல் மாணவியாக சத்யா விளங்கு கிறார்.
நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவி சத்யா தனியாகப் பயிற்சி எதையும் பெறவில்லை. ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் புத்தகங்கள் உதவியுடன் தேர்ச்சிப் பெற்று மருத்துவப் படிப் பிற்குத் தேர்வாகியுள்ளார். இந்தப் பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதல் மாணவி என்ற பெருமைக்கும் உரியவராக சத்யா விளங்குகிறார்.
இந்த நிலையில் மருத்துவப் படிப்பகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு (27-1-2022) நேற்று தொடங்கியது. இதில் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் நடந்தது.
இதில் அரசுப் பள்ளி மாணவி சத்யாவுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான சீட் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் 17 பேர் எம்.பி.பி.எஸ். 3 பேர் பி.டி.எஸ். படிப்புப் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.