நடிகர்கள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் மக்களுக்கு! -தனி நீதிபதி கருத்து
நடிகர்கள் ரியல் கதாநாயகர்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனத் தனி நீதிபதி தெரிவித்த கருத்து உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் விஜய் 2012-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். பொதுவாக, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய் யப்படும் கார்களுக்கு நுழைவு வரி வசூலிக்கப்படுவது இந்தியாவில் பின்பற் றப்பட்டுவருவதால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டுமென்று விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நுழைவு வரியை ரத்துசெய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கைத் தள்ளுபடி செய்து, `கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், முறையாக வரி செலுத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜத்திலும் ஹீரோ வாக இருக்க வேண்டும்’ என்று தன் கருத்துகளைத் தெரிவித்தார்
அதுமட்டுமல்லாமல், நடிகர்கள் முறையாக வரி செலுத்தவும், ‘ரியல்’ கதா நாயகர்களாக இருக்க வேண்டும்; ‘ரீல் ஹீரோ’ ஆக இருக்கக்கூடாது. நடிகர்கள் முறையாக வரி செலுத்த வேண்டும் எனவும், கருத்துத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அபராதம் விதித்தார் தனி நீதிபதி.
இதை எதிர்த்து சொகுசு கார் இறக்குமதிக்கான வரி செலுத்துவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி உத்தரவில் உள்ள விமர்சனங்களை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்தார்.
அப்பீலுக்குப் போன வழக்கில் தனி நீதிபதி விதித்த அபராத உத்தரவுக்கு, இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது. இதற்கிடையில், நுழைவு வரியாக 32.30 லட்சம் ரூபாயை, விஜய் செலுத்தினார். மேல்முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் அமர்வு விசாரித்தது. உள்நோக்கத்துடன் செயல்பட்டார் எனக் கூறமுடியாது என்ப தால், நடிகர் விஜய் குறித்து, தனி நீதிபதியின் உத்தரவில் கூறியிருந்த எதிர்மறையான கருத்துக்களை நீக்கி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கில் நடிகர் விஜய் என்பதை மறைத்து விஜய் வழக்கறிஞர் வழக்கைத் தாக்கல் செய் திருந்தார் எனத் தெரிகிறது. நீதிபதி வழக்கை ஆராய்ந்து பார்த்து வழக்கு சம்பந்தப்பட்டவர் ஒரு பிரபல நடிகர் என்பது தெரியவந்திருக்கிறது. அதன்பிறகே தனி நீதிபதி கடுமையான சொற்களைப் பிரயோகிக்கவேண்டிய தானது. அந்தச் சொல்லைப் பொறுக்காமல்தான் விஜய் மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதற்குத்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளை தீர்ப்பில் இருந்து நீக்குவதாக தீர்ப்பு கூறினார்கள். ரோல்ஸ்ராய்ஸ் காருக்கான வரியை செலுத்திய பின்னே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே 2020ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத் தில் கடந்த மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான சொத்து வரி செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதையடுத்து ரூ.6.50 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டி உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் ராகவேந்திரா மண்டபத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மார்ச் 24ஆம் தேதி முதல் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் எந்த வருமானமும் இல்லை. எனவே சொத்து வரி கேட்டு நிர்ப்பந்திக்ககூடாது” என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் “சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இது குறித்து எந்தப் பதிலும் வரவில்லை” என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா, “நோட்டீஸ் அனுப்பப் பட்டு 10 நாட்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத் திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள்? இதற்கு மேலும் இப்படி நடந்து கொண் டால் அபராதம் விதிக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து ரஜினிகாந்த் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ரஜினிகாந்த் தரப்பு மனுவை திரும்பப் பெறுவதாக ஒப்புக்கொண்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சொத்து வரி கட்டுவது தொடர்பாக ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது அன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. கட்சி தொடங்க இருந்த அன்றைய காலகட்டத்தில் “ரஜினிகாந்த் 6.50 லட்சம் ரூபாய் வரியைக் கட்டாமல் வழக்குத் தொடரலாமா?” என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட் டுள்ளார். அதில், “ராகவேந்திரா மண்டபச் சொத்து வரிக்கு நாம் மாநகராட்சி யில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம் என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது விஜய்க்கு அதே உயர் நீதிமன்றம் வரியைக் கட்டச் சொல்லி பாடம் கற்றுத் தந்துள்ளது.