தனுஷ் – ஐஸ்வரியா பிரிவு ஏன்?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் சமந்தா- நாகசைதன்யா இருவரும் அதிகாரபூர்வமாகப் பிரிவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகள், மருமகனின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ரஜினி காந்தை நிறையவே பாதித்துள்ளது. இருவரையும் அழைத்து பேசினாலும் பிரியவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனையடுத்தே இருவரும் பரஸ்பரம் தங்கள் முடிவை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் – ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்தப் பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதைச் சமாளிக்கத் தேவையான தனிமனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
எந்த ஒரு முடிவையுமே ஒரே நாளில் எடுத்துவிட முடியாது. திருமணம், விவாகரத்து போன்ற விஷயங்களும் அப்படித்தான். 25 ஆண்டு காலம் வாழ்ந்து வெள்ளி விழா கொண்டாடிய தம்பதிகூட விவாகரத்து செய்து பிரிந்திருக்கின்றனர். அப்படித்தான் 18 ஆண்டு காலம் குடும்பம் நடத்திய தனுஷ் ஐஸ்வர்யாவும் இப்போது பிரியப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான பின்னணி என்னவாக இருக்கும் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தனுஷைவிட இரண்டு வயது மூத்தவர் ஐஸ்வர்யா. 2 வயது இளையவரான தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
சினிமாவில் நடிக்க வந்து சில ஆண்டுகளிலேயே பிரபலமான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மகளைத் திருமணம் செய்துகொண்டு பெரிய குடும்பத்து மருமகனானார்.
தனுஷ் பிரபல நடிகராக இருப்பதால் சக நடிகைகளுடன் பலமுறை கிசுகிசுக்களில் சிக்கி யுள்ளார். பல நடிகைகளின் மணமுறிவுக்கும் காரணம் தனுஷ்தான் என்று பேசப்பட்டது. சர்ச்சைகள் எழுவதும் சமாதானம் ஆவதும் வாடிக்கையானது.
தனுஷ் நடிக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து முத்தக் காட்சிகள் இடம்பெற்ற தால் அவரது குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்படுத்துவதாகச் செய்திகள் வெளியானாலும் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இணைந்து பொது நிகழ்ச்சிகளில் தோன்றி தங்கள் உறவு சுமூகமாக இருப்பதைக் காட்டிக்கொண்டனர். சமீபத்தில்தான் இவர்கள் இருவரும் கோயிலுக்குச் சென்று மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியானது.
தனுஷின் சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் எனப் பயணப்பட்டார் தனுஷ். ஐஷ்வர்யாவும் சினிமாவில் கவனம் செலுத்தினார். ஆனாலும் ஐஸ்வர்யா பரத நாட்டியத்திலும் சிறந்து விளங்கி வருகிறார். இவர் 3, வை ராஜா வை, சினிமா வீரன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லா மல் 2003ஆம் ஆண்டு வெளியான ‘விசில்’ படத்தில் ‘நட்பே நட்பே’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால் தற்போது ஆன்மிகத்தின் பக்கம் பார்வை யைத் திருப்பினார். கடந்த ஆண்டு அப்பா ரஜினிகாந்த்துடன் இமயமலைக்குப் பயணப்பட்டார். பத்ரிநாத், கேதார்நாத் சென்று வந்தது முதலே நிறைய மாற்றங்கள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் தென்பட ஆரம்பித்தது.
ஆன்மிகத்தின் பக்கம் கவனத்தைத் திரும்பிய ஐஸ்வர்யா, யோகாவில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். பெண்களுக்காக திவா யோகா மையத்தைத் தொடங்கினார். யோகாவில் முழுவதுமாக அர்ப்பணிக்க விரும்புவதாகவும் அதனால் இல்லற வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்புவதாகவும் தனுஷிடம் கூறினாராம். தனுஷ் முதலில் ஏற்க மறுத்தாலும் தொடர் வற்புறுத்தல் காரணமாக ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்குச் சம்மதம் கூறிய தாகவும் தெரிகிறது.
தனுஷ் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் என பல துறைகளில் தன் திறமையைக் காண்பித்து வருகிறார். தற்போது ஹாலிவுட் படங்கள் வரை தனது கால் தடத்தை பதித்து இருக்கிறார்.
அமலா பால் – இயக்குநர் விஜய், சமந்தா – நாகசைதன்யா ஜோடியைத் தொடர்ந்து தற்போது ரஜினி குடும்பத்திலிருந்து ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து சினிமா ஜோடிகளின் வாழ்க்கைப்பிரிவு மேல்தட்டு மக்களின் நிரந்தரமற்ற வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
18 ஆண்டுகள் வாந்தவர்கள் பிரிந்து விட்டார்கள் சரி. ஆனால் பதின்பருவத்து இரு பிள்ளை கள் நிலையை இந்தப் பிரிவு எப்படி சரி செய்யும் என்பது தீர்க்கமுடியாது கேள்வி.