கின்னஸ் சாதனை புரிந்த நடன இயக்குநர் ஐ.ராதிகா!
தமிழக நாட்டிய கலைகளின் கலாச்சார மதிப்பை காக்கவும், இளைய தலை முறையினரிடம் இக்கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட் டும், திறமை இருந்தும் மேடை ஏறாத கலைஞர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பொருட்டு AMN Fine Arts சார்பில் Dr. R.J.ராம நாரயணன் நாட்டிய நிகழ்ச்சிகளை தினமும் தொடர்ந்து நடத்தும் நிகழ்வினை ஏ.எம்.என்.பைன் ஆர்ட்ஸ் சார்பில், தொடர் நடன நிகழ்ச்சி டான்ஸ் மாஸ்டர் ஐ.ராதிகாவின் மேற்பார்வையில் நடத்தி னார்.
தமிழ் சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக வலம் வரும் ராதிகா மற்றும் அவரது குழுவின் ஒருங்கிணைப்பில், சென்னையில் பல மேடை களிலும் ஆன்லைனிலும் 365 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நாட்டிய திருவிழா நடந்தேறியது. நாளின் எண்ணிகைக்கேற்ப நடனமாடும் நபர்கள் பங்கேற்று நடனமாடினர். பல முகமறியாத திறமை மிகு கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ஆன்லைன் மூலம் கின்னஸ் குழு கண்காணிப்பில் 600 நபர்கள் பங்கேற்க நீதிபதிகள் முன்னிலையில் ஶ்ரீ கோலவிழி அம்மன் பரத பெருவிழா நடன நிகழ்வு கின்னஸ் சாதனையாக நிகழ்ந்தது.
திறமை இருந்தும் மேடை ஏறாத கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில், ஓராண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள் ளது.
இந்நிகழ்வின் நிறைவு விழா, ‘நாட்டிய பெருவிழா – 600’ என்ற பெயரில் 600 நடன கலைஞர்கள் பங்கேற்க, புதுச்சேரியில் நடந்தது. இந்நிகழ்வு கின்னஸ் சாதனையாக அமைந்துள்ளதாக நடனக் குழுவினர் கூறினர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நாட்டியக் குழுவைப் பாராட்டி, கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். டான்ஸ் மாஸ்டர் ஐ.ராதிகா அவரது உதவியாளர்கள் L.R. சக்ரவர்த்தி மற்றும் P.வெங்கடேஷ் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.