பதவி என்பது ஆடை மாதிரிதான்! சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அண்மையில் பதவி ஏற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி எம்.எம். சுந்தரேசுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நீதிபதி எம்.எம்.சுந்தரேசை பாராட்டி ஐகோர்ட்டு நீதிபதிகள் பேசினர். இதை யடுத்து ஏற்புரையாற்றிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், “டெல்லியில் தற்போது நிலவும் குளிரைவிட, இங்கு காட்டப்பட்ட பாச மழையால் உடல் நடுங்குகிறது. பதவி என்பது ஆடை மாதிரிதான். அதனால் பதவியில் இருக்கும் போது, யாரும் செருக்குடன் செயல்படக்கூடாது. சில நேரங்களில் வக்கீல்கள் தவறி ழைத்தாலும், அவர்கள் மீது நீதிபதிகள் கோபப்படக்கூடாது. நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், தற்போது தாக்கலாகும் வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால்தான், நீதிமன்றங்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். எனவே, மக்களைத் தேடிச்சென்று நீதி வழங்க வேண்டும்” என்று பேசினார்.

சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அது தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. எம்.பி.யும், மூத்த வக்கீலுமான பி.வில்சன், எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும், அதை எளிதில் தீர்வு காணும் திறமை கொண்டவர் நீதிபதி சுந்தரேஷ் என்று பாராட்டு தெரிவித்தார். மேலும், நீதிமன்றம், நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடும் வக்கீல்கள் மீது பார் கவுன்சில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், நீதிபதிகளை அவதூறு செய்யும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் ஒரு போதும் தயங்காது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று பேசிய பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சுப்ரீம் கோர்ட்டு கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த இந்த விழாவில், ஐகோர்ட்டு நீதிபதி கள் எம்.துரைசாமி, டி.ராஜா, வி.பாரதிதாசன், எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ்குமார், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி, ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், ஜெ.சத்தியநாராயண பிரசாத், ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், மத்திய, மாநில அரசு வக்கீல்கள், வக்கீல் கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பார் கவுன் சில் துணைத் தலைவர் வி.கார்த்திகேயன் நன்றி தெரிவித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

பிரிவு உபச்சார விழா

முன்னதாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உள்ளிட்ட நீதிபதிகள் கலந்துகொண்ட விழாவில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பிரிவு உபச்சார உரை நிகழ்த்தினார். அப்போது அவர், 24 ஆண்டுகளாக வழக்கறிஞ ராகவும், 12 ஆண்டுகள் நீதிபதியாகவும் நீதிபதி சுந்தரேஷ் பணியாற்றி யுள்ளார் எனவும், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 563க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப் பளித்துள்ளார் எனவும் புகழாரம் சூட்டினார்.

நீதிபதி சுந்தரேஷ் தனது பதிலுரையில், “பிறந்த வீட்டைவிட்டு புகுந்த வீடு செல்லும் மணப்பெண் ணைப் போல, பள்ளி படிப்பை முடித்து மேல் படிப்புக்கு செல்லும் மாணவனைப் போல உணர்வ தாக”க் குறிப்பிட்டார்.

“பிரிவு எப்போதும் சிக்கலானது தான் என்றாலும் வாழ்க்கை முன்னோக்கி செல்ல வேண்டும்” எனக் கூறிய அவர், “அனைவரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்” எனக் கூறினார்.

“இதுவரை லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்திருந்தாலும், மனசாட்சிக்கு எதிராக ஒரு தீர்ப்பு வழங்கியதில்லை” எனக் குறிப்பிட்டார்.

நீதிபதி சுந்தரேஷ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 56 ஆக குறைகிறது. மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75 என்ற நிலையில், 19 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!