பல்லடம் கருப்பராயன் கோவிலில் 32 அடி உயர பிரம்மாண்ட அரிவாள் பிரதிஷ்டை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி பழனி கவுண்டம்பாளையத் தில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில் முன்புறம் வைப்பதற்காக சுமார் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பல்லடம் கருப்பராயன் கோயில் பல்லடம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தக் கிராமக் கோயிலில் வேண்டிக்கொண்டு போனால் எந்தக் காரியமாக இருந்தாலும் நிச்சயம் அந்தக் காரியம் உடனே நடக்கும் என்கிற நம்பிக்கையை ஊர் மக்கள் வைத்துள்ளனர். அதன்படி நிறைய பக்தர்களுக்கு நிறைவேறியுள்ளது. அப்படி நிறைவேறிய ஒரு பக்தர் கருப்பராய சாமியின் ஆயுதமான அரிவாளை கோவில் முன்பு பிரம்மாண்டமான அளவில் செய்து வைக்க வேண்டுமென கூறியதால் 2000 கிலோ எடையில் 32 அடி உயர அரிவாள் செய்யப்பட்டது. அதனை கோவில் முன்பு கிரேன் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 32 அடி உயர பிரம்மாண்ட அரிவாளை பக்தர்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
நல்ல காரியங்கள் நிறைவேறவும் பிரச்னைகள் தீரவும் வேண்டி பக்தர்கள் தங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களுக்கு வேண்டிக்கொண்டு கோரிக்கைகள் நிறைவேறியதும் நேர்த்திக் கடனைச் செலுத்தும் வழக்கம் காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. அவ்வாறு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பழனிகவுண்டம்பாளையம் கிராமத்தில் நேர்த்திக்கடன் நிறைவேற்ற வேண்டிய பக்தர் ஒருவர் 36 அடி உயர அரிவாளை கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
புதுக்கோட்டையிலிருந்து வந்த குழுவினர் பத்து பேர் ஒரு மாதம் தங்கி யிருந்து 2 டன் எடையுள்ள இந்த அரிவாள் எட்டு அடிக்கு பொக்லைன் உதவியுடன் அஸ்திவாரம் எடுத்து நிறுத்தப்பட்டு பூஜிக்கப்பட்டது.
இது குறித்து கோவில் பூசாரி சண்முகம் கூறுகையில், “கருப்பராயன் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூஜை செய்து வருகிறேன். வேண்டுதல் நிறைவேறிய பலரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்வார்கள். கோரிக்கை நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அவ்வாறு தாராபுரம் அருகே பேட்டைக்காளிபாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டார். அவர் பூரண குணமடைய வேண்டி வழிபட்டார். கோரிக்கை நிறைவேறியதைத் தொடர்ந்து 36 அடி உயர அரிவாளை பிரதிஷ்டை செய்தார். இன்னும் சில தினங்களில் வேண்டதல் நிறைவேறிய மற்றொரு பக்தர் 62 அடி உயரத்தில் அரிவாள் பிரதிஷ்டை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார் பூசாரி.