இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்
வளர்ச்சியடைந்த கொரானோ வைரஸ் தொற்றாகக் கருதப்படும் ஒமிக்ரான் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.
கொரேோனா மற்றும் டெல்டா, ஜிகா வைரஸ், சார்க் என பல உருமாற்றங்களை எடுத்தது. ஆனால் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ். உலகம் முழுவதும் 29 நாடுகளில் இதுவரை 373 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த கர்நாடகா வைச் சேர்ந்த 2 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக கூறினார்.
கொரோனா வைரஸ் பரவல் நிலையைப் பொறுத்தவரை ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 கோடியே 75 பேர் பாதிப்புக்குள்ளாகி இருப்ப தாக தெரிவித்தார். 31 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாகக் கூறினார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்தியா முழுவதும் 2வது தவணை தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகளை பல்வேறு அமைப்புகள் தீவிரப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். இதனால் மென்அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் திரும்பி வரமுடியாமல் தவிக்கின்றனர்.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல்வேறு வகை வீரியமடைந்த கொரோனா வைரஸ்களால் உலகம் பெரும் பாதிப்பை சந்தித் துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா விலிருந்து பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனா வான ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.
இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பயணத் தடைகளை விதித்துள்ளன. ஜப்பானில் உலக விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்தியாவில் இன்னும் விமான சேவை நிறுத்தப்படவில்லை. அதை உடனே நிறுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் சுமார் 29 நாடுகளில் ஒமிக்ரான் பரவி உள்ளது. இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்த முதற்கட்ட அடிப்படை விவரங்கள் ஆராய்ந்து வெளியிடப் பட்டுள்ளது.
சாதாரண காய்ச்சல், உடல் வலி, தொண்டை கரகரப்பு போன்றவை ஒமிக்ரான் வைரசின் அறிகுறி களாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொரோனா பாதித்து குணமடைந்தவர்களை இது எளிதில் தாக்கும் வாய்ப்பு இருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் குறைபாட்டுடன் சிகிச்சை பெற்றவர்களை ஒமிக்ரான் தாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் தொற்று மூலம் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களுக்கு பெரிய அளவுக்கு பாதிப்புகள் இருக்காது.