மங்கல தேவி கண்ணகி கோவில்

 மங்கல தேவி கண்ணகி கோவில்

பத்தினி என்ற பெயரில் பெண் தெய்வமாக புத்த துறவிகளாலும், கண்ணகி அம்மனாக தமிழர்களால் இலங்கையில் வழிபடப்படுகிறது.

கேரளாவில் கொடுங்கநல்லூர் பகவதி, மங்கல தேவி, ஆற்றுக்கால் அம்மன் என்ற பெயரில் வழிபடப்படுகிறது. 

இந்த கோவில் தமிழ்நாடு, கேரளா எல்லையில் உள்ள வண்ணதிபாறை என்ற இடத்தில் அமைந்துள்ளது.

செல்லத்தம்மன் கோவில் தமிழ் நாட்டில் மதுரையில் உள்ள ஒரே கண்ணகி கோவில்

இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ளது.

கண்ணகியை தெய்வமாக வணக்கிய வேடுவர்கள் சித்திரா பௌர்ணமியன்று விழா எடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போதும் அன்று ஒருநாள் மட்டும் விழா நடக்கிறது.

மதுரையை எரித்தபின் தென்திசை வழியாக 14 நாள் நடந்து இவ்விடத்துக்கு வந்தாள்.

அப்போது விண்ணுலகிலிருந்து புஷ்பக விமானத்தில் வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றான். இதைக்கண்டு ஆச்சரியமடைந்த மலைவாழ் மக்களான வேடுவர்கள், அவளை தெய்வமாக பாவித்து “மங்கல தேவி” என்ற பெயரில் வணங்கினர்.

ஒரு சமயம் சேரன் செங்குட்டுவன், இப்பகுதிக்கு வேட்டையாட வந்தான்.

அவனிடம் மக்கள் தாங்கள் கண்ட அதிசயத்தைக் கூறினர். மகிழ்ந்த மன்னன் , இங்கு வந்தது கண்ணகி என அறிந்து மகிழ்ந்தான். இங்கு அவளுக்கு கோயில் எழுப்ப விருப்பம் கொண்டான்.

இதற்காக இமயத்திற்கு சென்று கல் எடுத்து , அதை கங்கையில் நீராட்டி, கண்ணகிக்கு சிலை வடித்தான். இங்கு கோயில் கட்டி சிலையைப் பிரதிஷ்டை செய்தான்.

கண்ணகி வழிபாடு –

கொடுங்கநல்லூர் பகவதி கோயில்

இந்த கோவில் கேரளாவில் உள்ள திரிசூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் குறும்பா பகவதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த அம்மன் எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறாள். அசுரரின் தலை, வாள், மணி, சிலம்பு என்று ஒவ்வொரு கையில் ஒரு பொருளை ஏந்தி உக்கிரமாக காட்சியளிக்கிறாள்.

இந்த கோயில் சேரன் செங்குட்டுவனால் கண்ணகிக்காக கட்டப்பட்ட கோயிலாகும்.

அம்மன் கையில் உள்ள சிலம்புதான், கண்ணகியின் கால் சிலம்பு என்று கூறுகிறார்கள் .

ஆற்றுக்கால் கோயில் :

கண்ணகி கடைசியாக வந்து அமர்ந்த இடம் கொடுங்கநல்லூர் பகவதி கோயில்.

அந்த கோயிலுக்கு வரும் வழியில் ஆற்றுக்கால் வந்தடைந்தாள் கண்ணகி. அங்கு சிறுமியின் உருவம் எடுத்த கண்ணகி, அங்குள்ள ஆற்றை கடக்க உதவுமாறு அங்குள்ள ஒரு வயதானவரை கேட்டதாகவும் , அவர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

அந்த பெண் அந்த இடத்திலிருந்து மறைந்ததாகவும், அந்த முதியவரின் கனவில் வந்து தனக்கு ஒரு கோயில் கட்ட சொன்னதாகவும் , அவர் கட்டிய கோயில்தான் ஆற்றுக்கால் கோயிலாகும் .

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...