“ஓ.டி.டி. தளம் தமிழ் சினிமாவுக்கு வரம்” – தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

 “ஓ.டி.டி. தளம் தமிழ் சினிமாவுக்கு வரம்” – தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

கடந்த சனிக்கிழமை காந்தி ஜெயந்தி அன்று சென்னை, வளசரவாக்கத் தில் பியூர் சினிமா அமைப்பு திரு. அருண், ஓடிடி தளங்கள் எதிர்பார்க்கும் கதைக்களம், சினிமாவின் எதிர்காலம், திரையரங்கங்களின் எதிர்காலத் தேவை, சாமானியர்கள் எப்படி ஓடிடி தளங்களை அணுகுவது குறித்து ஒரு கூட்டம் நடத்தினார். அதில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதன் தொகுப்பு இங்கே.

“அனைவருக்கும் வணக்கம், புதிய அருமையான சிறந்த கதை அமைப்பு கொண்ட படங்களுக்கு இன்றையக்கு ஓடிடி தளம் ஒரு அருமையான தளமாக அமைந்துள்ளது. ஓடிடி தளங்கள் படங்களாக இருந்தாலும் வெப் சீரிஸாக இருந்தாலும் எதிர்பார்க்கிறது என்னவென்றால், உலகத் தரத்தில் ஒரு கதை. இதுவரை யாரும் கேட்காத, பார்க்காத கதை. இன்றைக்கு நெட்பிக்ஸ்லயும் ஹாட் ஸ்டார்லயும் அமேசான் பிரைம்லயும் அவ்வளவு கான்ஸெப்ட் வந்திருக்கிறது. அவ்வளவு படங்கள் பிரிமியர் ஆகிடுச்சு.

நான் ஓடிடி தளத்தில் வரும் படங்களை முன்னாலயே பார்க்கும் பல படங்கள் ரொம்ப அவரேஜான கான்செப்ட். 185 பிக்சர்ஸ் படிச்சேன். அதுல வர்ற நாலைஞ்சு கான்செப்ட் தவிர எல்லாமே ஒரு கொலை நடக்கிறது, ஒரு போலிஸ் ஆபிஸர் விசாரணை செய்கிறார். இதுதான் இருக்கறதே தவிர புதுசா ஒன்னை யோசிப்போம், புதுசா ஒரு கதை சொல்வோம்னு இல்லை. ஏதோ ஒரு வகையில் இந்த உலகம் நம்மைப் பார்த்துச் சொல்லணும் ஓவ்… நீ நல்ல பிலிம் மேக்கர். நல்ல ரைட்டர்னு.

எல்லாரும் மற்ற படங்களைப் பார்த்து கமென்ட் பண்றமே தவிர நாம நல்ல கதைய படமாக்கத் தயாரா இல்லை. லிப்ட்னு ஒரு படம் புதுசா கான்செப்ட்ல எடுத்திருக்காங்க. அது மாதிரி புதுசா ஒரு கதையை எடுத்துட்டு வரும்போது உங்களுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. ஓடிடி தளங்கள் உங்களுக்காக ரெடியா இருக்கிறாங்க. அவங்க எல்லாம் எதிர்ப்பார்க்கிறது இதுவரையும் வெளிவராத ஒரு கதை. இதுவரையும் பார்க்காத த்ரில்லர், மர்டர், இதுவரையும் பார்க்காத ஒரு விஷயம்.

அதேமாதிரி தமிழ்ல வெப்சீரிஸ் பிரமாதமான வெப்சிரிஸே வர்றதில்லை. இந்தியில நிறைய வந்திட்டிருக்கு. ஹாலிவுட்ல கன்னாபின்னான்னு வெப்சீரிஸ் வந்திட்டிருக்கு. சினிமாவுக்கான பாகம் வேறு வெப்சீரிஸுக்கான பாகம் வேறு. சினிமாவுக்கு ஒரு ஒரே பிரச்சினையை வச்சு எடுக்கலாம். ஆனால் வெப்சீரிஸ் எட்டு பத்து விஷயங்களை வைத்து எடுக்கணும். பொன்னியின் செல்வன் மாதிரியான கதையை ஒரு மணி நேரத்தில் எடுக்கமுடியாதுன்னா வெப்சீரிஸா எடுக்கலாம். மகாபாரதக் கதையா இருக்கலாம்.

அதேமாதிரி ஒரு கதையை இரண்டு மணிநேரத்தில் எடுக்கமுடியாது. ஆறு மணிநேரம் ஆகும். கதை நல்லாருக் கன்னா வெப்சீரிஸுக்கு முயற்சிக்கலாம். ஒரு சினிமாவுக்கான கதையை வெப்சீரிஸா எடுக்கக்கூடாது. சின்னப் படம் 23 லட்சத்தில் எடுக்கப்பட்ட படங்களைக்கூட ஓடிடி தளத்தில் வாங்க தயாரா இருக்காங்க. 2 கோடி படத்தையும் வாங்க தயாரா இருக்காங்க. 20 கோடி படங்களையும் வாங்கத் தயாரா இருக்காங்க. கான்செப்ட் முக்கியம். தியேட்டருக்குப் போகணும்னு அவசியமில்லை. ஓடிடி பிரிமியம் ரெடியா இருக்காங்க. லாக்டவுனுக்குப் பிறகு நாங்க ரெடியா இருக்கிற 102 படங்களப் பார்த்தோம். 12 படங்கள் மட்டும்தான் தேர்வாச்சு. அந்த 90 படங்களின் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் பத்தி நாங்க ரொம்ப வருத்தப்பட்டோம்.

ஏன்னா அந்த 90 படங்களும் ஓடிடியிலும் கிளிக் ஆகாது. தியேட்டருக்கு வந்தாலும் ஓடாது. அப்ப எங்க தப்பு வர்றது? நம்ம ரைட்டிங்லதான் தப்பு நடக்குது. ஓடிடி தளங்களில் தனிப்பட்ட கருத்தை எடுக்கமாட்டாங்க. குழுவாதான் 8 பேர் 10 பேர் பார்ப் போம். அதேமாதிரிதான் வெப்சீரிசும் பத்து பேர் படிச்சுப் பார்ப்பாங்க. அதனால இதைத் தனிப்பட்ட தனஞ்செயன் கருத்துன்னு நினைச்சிக்காதீங்க. 95 பெர்ஸன்ட் படங்கள் எந்தவித அடிப்படை விவாதமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் எடுக்கப்படுகிறது. மக்களுக்காக எடுக்கறோம்.

இதை மக்கள் பார்ப்பாங்க. இதனால் அந்தத் தயாரிப்பாருக்கு ஏதாவது பெனிபிட் கிடைக் கணும்னு நினைக்கணும். எனக்கொரு கதை கிடைச்சது, ஒரு படம் பண்றேன். அப்படீன்னு முடிச்சிடறாங்க. அப்பறம் அந்தப் படத்தை எப்படி வியாபாரம் பண்றதுன்னு தெரியாமல் வர்றாங்க. எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன். நாமே சொந்தமா எழுதணும்னு நினைக்காதீங்க. உங்களால ஒரு பிரமாதமான கதை எழுத முடியும்னா எழுதுங்க. ஆனா நான்தான் கதை எழுதுவேன்னு வலிஞ்சு எழுதவேண்டாம். தமிழில் நிறைய சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் இருக்கிறது.

அதை அவர்களிடம் கேட்டு வாங்கிப் படமாக்கலாம். வெற்றிமாறன் அவர் எடுக்கிற எல்லா கதைகளையும் யாராவது ஒரு நாவலிஸ்ட் கதையைப் படமா எடுக்கிறாரு. அடாப் பண்றாரு. ப்ரிலியன்ட்டா திரைக்கதையை அமைக்கிறார். வாடிவாசல் என்கிற சின்ன நாவல் 68 பக்கம். அதை எடுத்துக்கிட்டு 150 கோடியில் ஒரு படம் எடுக்கிறார். அதோமாதிரி வெக்கை என்கிற நாவலை எடுத்து அசுரன் படம் எடுக்கிறார். அசோக்குமார் எழுதின கதையை விசாரணைன்னு ஒரு படம் எடுக்கிறார். மிகப் பெரிய வெற்றியடைகிறார். எக்கச்சக்க நாவல்கள் தமிழில் இருக்கிறது. எவ்ளோ எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்கள்.

நீங்க பண்ண வேண்டிய ஒன்னுதான். முதல்ல ஒரு கதையை வைத்து டெவலப் பண்ணுங்க. எங்காவது க்ளிக் ஆச்சுன்னா அந்த ரைட்டர்கிட்ட போய் காசு கொடுத்த வாங்குங்க. அவங்க சந்தோஷமா தருவாங்க. ஏன் கதைக்கு நீங்க போராடறீங்க. மெனக்கெடறீங்க. தானே கதை, திரைக்கதை, வசனம் எழுதணும்னு அவசியமே இல்லை. தமிழ் சினிமாவில் தேவை நல்ல கதைகள். நல்ல கதைகள் இருந்தால் தயாரிப் பாளர்கள் ரெடி. வெளியிட ஓடிடி பிளாட்பார்ம் ரெடி. அப்ப என்கிட்ட நல்ல கதை இல்லையான்னு கேட்காதீங்க. எனக்குத் தெரியாது.

நீங்க 90 பெர்ஷன்ட்ல இருக்கீங்கலா, 10 பெர்ஸன்ட்ல இருக்கீங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா எல்லாம் என்ன நினைக்கிறாங்க. 10 பெர்ஷன்ட் கதைல அப்ரூவல் ஆகுற கதைலதான் இருக்கேன்னு நினைக்கிறீங்க. ஆனா கடைசில வரும்போது 90 பெர்ஷன்ட்ல வந்துச்சுன்னா நாங்க பொறுப்பில்ல. அதே ஒரு பாப்புலர் கதையை எடுத்து அதை அடாப் செய்து பண்ணீங்கன்னா உங்களு டைய ரிஜக் ஷன் ரேட் ரொம்ப கம்மியா இருக்கும். ஏன்னா அதுல ஒரு ஆத்மா இருக்கும். தேடித் தேடி போகணும், நாவல்களைத் தேடணும். இயக் கியத்தைத் தேடணும். அதிலிருந்து எடுத்து படம் பண்ணணும்.

நாங்க சில படங்கள் எடுத்திட்டுதான் இருக்கிறோம். நல்ல கதைகள் வராதபோது கமர்ஸியல் படங்கள் எடுத்திட்டிருக்கிறோம். இந்த ரெண்டு வாரத்தில் ஜெயிச்ச எல்லா படங்களும் கமர்ஷியம் படங்கள்தான் ருத்ரதாண்டவம், நான் எடுத்த கோடியில் ஒருவன், சிவகுமாரின் சபதம், எல்லாம் கமர்ஷியம் படங்கள்தான். இது எல்லாம் வெகுஜன சினிமாக்கள். இதுதான் தொடர்ந்து வரப்போகுது.

இந்தப் படங்கள் ஒரு பேக்கேஜ். அதுல ஒரு ஆர்டிஸ்ட், டைரக்டர், ஒரு காம்பினேஷன் இருக்கும். அந்த தயாரிப் பாளருக்கு வியாபாரம் ஆகிடும். கோடியில் ஒருவன் எங்களுக்குப் படம் வெளிவருவதற்கு முன்னே சாட்டிலைட், டிஜிட்டல் எல்லாம் வியாபாரம் ஆகிடுச்சு. இந்தி, தெலுங்கு டப்பிங் எல்லாம் வித்தாச்சு. தியேட்டர் மேல் வருமானத்துக்குதான். அடுத்த கட்டமா படம் எடுக்க ரெடியாகிட்டோம். இதை எதுக்குச் சொவ்றேன்னா வெகுஜன சினிமா பார்மட் வேறு. ஆனால் யார்த்த சினிமா, அழகியல் சார்ந்த சினிமா, உலகமே போற்றும் சினிமா எடுக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது.

அப்படி அற்புதமான சினிமா எடுத்திட்டீங்கன்னா ஓடிடியில் வெளியிட ரெடியா இருக்காங்க. ஏன்னா அவங்களுக்குத் தேவை இந்த மாதிரி அற்புதமான சினிமாதான். இதனால தயாரிப்பாளர் தப்பிச்சுடுவார், டைரக்டருக்கு அடுத்த படம் கிடைச்சுடும்.

எல்லாரும் எடுத்த உடனே பெரிய ஆர்ட்டிஸ்ட படம் பண்ணணும் நினைக்கிறாங்கள், அது தவறு. சின்ன படங்களே 25 லட்ச ரூபாயில் இருந்து ஒரு கோடி வரை உள்ள படங்கள் மிக அருமையாக எடுக்கலாம். நல்ல கதை, உலகமே வியந்து பார்க்கிற படம் எடுத்தால் உங்களுக்கான வாய்ப்பு மிகப் பிரகாசமா இருக்கிறது. தியேட்டர் என்பதை மீறி ஓடிடி என்பது பிரகாசமாக இருக்கிறது. இந்த இன்டஸ்ட்ரி இன்னும் பெரிய அளவில் வளரப்போகிறது. நிறை வாய்ப்புகள் இருக்கிறது. நல்ல ரைட்டர், நல்ல இயக்குநர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

அதில் நாமும் ஒரு ஆளாக இருப்போமா என்பது உங்கள் கதையை, மேக்கிங்கை பொறுத்து இருக்கிறது. இங்க ரெகமன்ட்டேஷன் தேவையில்லை, கான்டாக்ட் தேவையில்லை. உங்கள் கதைதான் பேசும். அந்தளவுக்கு அவ்வளவு படிச்சீங்கன்னா கண்டிப்பா உங்களால ஒரு நல்ல கதையைச் சிறந்த படமாக எடுக்க முடியும். அதனால் நிறைந்த படிங்க படிங்க படிங்க. அங்கங்க பேசிக்கிட்டிருக்காதீங்க ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணாதீங்க. படிப்பின் மூலம்தான் உங்களால கதைகளை உருவாக்க முடியும். இதுதான் நான் உங்களுக்குச் சொல்ற விஷயம். உங்கள் சினிமா பற்றிய நம்பிக்கை தருவதற்காகத்தான் நான் இதை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். நன்றி.”

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...