வரலாற்றில் இன்று – 22.07.2021 பை தோராய தினம்
பொதுவாக இத்தினம் ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. பையின் மதிப்பு எண்ணளவில் 22ஃ7 (அ) 3.14 ஆகும்.
பை தினம் முதன்முறையாக 1988ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. மேலும் லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாணிதாசன்
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் 1915ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும்.
இவருடைய பாடல்கள் ‘தமிழ் கவிதைக் களஞ்சியம்’ வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.
இவர் 30ஆண்டிற்கு மேல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார். எனினும் வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.
கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமை கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட வாணிதாசன் 1974ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1888ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற செல்மன் ஆபிரகாம் வேக்ஸ்மன் பிறந்தார்.
1784ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி முதன்முதலாக சூரியனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள தொலைவைக் கண்டறிந்த பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் பிறந்தார்.
1923ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இந்திய பாடகர் முகேஷ் சந்த் மத்தூர் பிறந்தார்.
1968ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இந்தியாவின் முன்னோடிப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மறைந்தார்.
1972ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் டி.எஸ்.பாலையா மறைந்தார்.