அன்பு | கவிதை | மாதங்கி

 அன்பு | கவிதை | மாதங்கி

உயிருக்குள் உயிர் உருவாகி,
வலியின் உச்சத்தில் ஜனித்து,
“குவா குவா” இசையில்
வலியை மீறிய மகிழ்வின்
புன்னகை தாய்மை;

தன் உதிரம் உயிராய்
கண்முன் உருவாகி
உயிர்தொடும் இதத்தின்
எல்லையில் தந்தையின் தாய்மை;

கண்ணாடி வளையல்கள்
களிமண் பொம்மைகள்
பறக்கும் ஏரோப்ளேன்
அசையும் வாத்து
த்த்தித்தாவும் நாய்க்குட்டி
“கூ”வென்று ஓடும் இரயில்
சண்டையிட்டு வாங்கிய சகோதரத்துவம்;

இரத்த உறவில்லை
“உன்னுயிர் துடித்தால்
என்னுயிரும் துடிக்கும்,
நீயும் நானும் ஒன்று” என
யாரிடமும் பேசாத அந்தரங்கள் பேசி
உணர்ந்து, பகிர்ந்து,
சகலத்திலும்
தோள் கொடுக்கும் தோழமை;

நீயே என் மூச்சு
நீயே என் உயிர்,
நீயே என் துடிப்பு என
உருகி, மருகி
கண்ணுக்குள் கரைந்து,
உயிர் கலந்து, உடல் கடந்து
மரணத்தின் இறுதியிலும்
மறக்காத காதல்;

உருவங்கள் வேறு;
உணர்வுகள் வேறு;
அடித்தளம் ஒன்று தான்;
அது அன்பு தான்..

கொட்டிக்கொடுத்தாலும்
வாரிக்கொடுத்தாலும்
என்றும் அழியா
உணர்வுகளின் உன்னதம்
உறவுகளின் பொக்கிஷம்
அன்பு தான்…

பெருமை, தியாகம், வீரம்,
புன்னகை, கண்ணீர், வலி
கர்வம், கோபம், நாணம்…
எந்த உணர்விலும்
அடித்தளம் அன்பு தான்:

அன்பின்றி உயிரில்லை
அன்பின்றீ உணர்வில்லை
அன்பின்றி எதுவுமில்லை…

கமலகண்ணன்

2 Comments

  • ❤️❤️

    • thanks di

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...