வார ராசிபலன்கள் (05.07.2021 – 11.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் (05.07.2021 – 11.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களே… இந்த வாரம் குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வேகமான செயல்பாடுகளை குறைத்துக்கொள்ளுங்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவு உண்டாகும்.

ரிஷபம் :

ரிஷப ராசி அன்பர்களே… இந்த வாரம் விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகளும், கலகலப்பான சூழ்நிலைகளும் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும்.

வழிபாடு :
மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்துவர கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

.

மிதுனம் :

மிதுன ராசி அன்பர்களே… இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணியில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாக அமையும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.

வழிபாடு :
சிவபெருமானை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

கடகம் :

கடக ராசி அன்பர்களே… இந்த வாரம் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சமூகப்பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் குருமார்களை வழிபாடு செய்துவர எதிர்பாராத உதவிகளின் மூலம் மாற்றமும், அனுகூலமும் ஏற்படும்.

சிம்மம் :

சிம்ம ராசி அன்பர்களே… இந்த வாரம் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழி தொழிலின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசிகள் கிடைக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான சிக்கல்கள் குறையும்.

கன்னி :

கன்னி ராசி அன்பர்களே… இந்த வாரம் இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் குறையும். அரசு அதிகாரிகளின் உதவிகளால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்களும், எதிர்பாராத பணவரவுகளும் உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் குபேர வழிபாடு செய்துவர தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.

துலாம் :

துலாம் ராசி அன்பர்களே… இந்த வாரம் நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறையும். சிலருக்கு சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் நற்பலன்கள் ஏற்படும். பிரபலங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும். தேவையற்ற கருத்துக்களை கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும். எந்த செயலையும் செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் பார்வதிதேவியை வழிபாடு செய்துவர வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி அன்பர்களே… இந்த வாரம் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வழக்கு தொடர்பான பணிகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். சிறு சிறு மனச்சங்கடங்களை வெளிப்படையாக பேசி பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை செய்ய வேண்டும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

வழிபாடு :
தினமும் விநாயகரை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.

தனுசு :

தனுசு ராசி அன்பர்களே… இந்த வாரம் மனதில் தோன்றும் சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஐயப்பனை வழிபாடு செய்துவர குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

மகரம் :

மகர ராசி அன்பர்களே… இந்த வாரம் மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். குடும்ப பெரியோர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவுகளை எடுக்க வேண்டும்.

வழிபாடு :
நவகிரகங்களில் இருக்கும் சனீஸ்வரரை வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியமும், எண்ணத்தெளிவும் ஏற்படும்.

கும்பம் :

கும்ப ராசி அன்பர்களே… இந்த வாரம் தொழில் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் ஐயனாரை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

மீனம் :

மீன ராசி அன்பர்களே… இந்த வாரம் திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். உறவினர்களின் மூலம் திருப்தியான செய்திகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான விருப்பங்களில் மாற்றங்கள் ஏற்படும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர குடும்ப ஒற்றுமை மேம்படும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...