வரலாற்றில் இன்று – 25.06.2021 விண்டோஸ் 98
விண்டோஸ் 98 வரைகலை இயங்குதளமானது ஜூன் 25, 1998 அன்றுமைக்ரோசாப்டினால் வெளியிடப்படது.
இவ் இயங்குதளம் விண்டோஸ் 95 இன் மேம்படுத்தப் பட்ட ஓர் பதிப்பாகும். இவ்வியங்தளத்தில் புதியதாக USB அறிமுகம் செய்யப் பட்டது. FAT32 கோப்புமுறையை ஆதரித்தால் வன்வட்டின் (ஹாட்டிஸ்க் – Harddisk) பிரிவு (Partition) ஒன்றில் 2 GB இடப்பிரச்சினை இருக்கவிலையெனினும் அதிகூடிய பிரிவுன் அளவானது 32 GB ஆகும். இண்டநெட் எக்ஸ்புளேளர் உலாவியானது இவ்வியங்குதளத்திலும் கூட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியானது ஆக்டிவ் டெஸ்டாப் (en:Active Desktop) என்றழைக்கப் படுகின்றது.
ஏப்ரல் 1998 இல் கொம்டெக்ஸ்ஸில் (en:Comdex) இவ்வியங்குதளத்தின் இணைத்தவுடன் இயங்கும் (Plug and Play) வசதி இதில் ஓர் முக்கிய அம்சமென பில்கேட்ஸ் குறிப்பிட்டுக்கூறினார். எனினும் அவரின் உதவியாளர் ஸ்கானரை (Scanner) இணைத்து அதற்குரிய மென்பொருளை நிறுவமுயன்றபோது அவ்வியங்குதளம் நிலைகுலைந்தது (crashed). அப்போது பில்கேட்ஸ் இதற்காகத்தான் இன்னமும் மக்களிடம் விண்டொஸ் 98 ஐ வழங்கவில்லை என்றார்
விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பானது 5 மே 1999 இல் வெளியிடப்பட்டது. இதில் மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 4 இற்குப் பதிலாக இதிலும் வேகமான இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 இணைக்கப்பட்டது. அத்துடன் இணைய இணைப்பைப் பகிரும் வசதிகளூடாக ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகள் வலையமைப்பில் ஒரே இணைய இணைப்பைப் பாவிக்கக்கூடியாத உள்ளது.
1998 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனம், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக இடம் பெற்றது. அதன் பங்கு மூலதனத்தின் மதிப்பு திடீரென உயர்ந்து 61 ஆயிரத்து 300 கோடி டாலர் என்ற அளவில் எகிறியது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், அதிக அளவில் தன் பங்கு மூலதனத்தை உயர்த்திய நிறுவனமாக தொடர்ந்து மைக்ரோசாப்ட் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் தொடக்கம், விண்டோஸ் 95 தொகுப்பின் மூலமே உருவானது.
இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை மலர்களால் மட்டுமே ஆனதாக எண்ண வேண்டாம். வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக மைக்ரோசாப்ட் நடந்து கொள்கிறது என்ற கூக்குரல் அடிக்கடி எழும்பியது. இதனால், தொடர் வழக்குகளை, மைக்ரோசாப்ட் சந்தித்தது. அதே போல, 2001ல் வெளியாகி மகத்தான வெற்றியைத் தந்தது விண்டோஸ் எக்ஸ்பி.
விண்டோஸ் 98, விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பு, விண்டோஸ் Me, விண்டோஸ் 2000, விண்டோஸ் XP விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 10 எ;று வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது விண்டோஸ் 11 என்றும் பதிய வர்சனை வெளியிட்டிருக்கிறது…
உலக வெண்புள்ளி தினம்
உலக வெண்புள்ளி தினம் நாடு முழுவதும் ஜூன் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். இந்நோய் பற்றி மக்களிடையே இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானது. எனவே, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மாலுமிகள் தினம்
உலக வர்த்தகம் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறது. மாலுமிகள் ஆதிகாலந்தொட்டு உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். அதனால், உலகம் முழுவதும் உள்ள மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும், அவர்களை கௌரவிக்கவும் சர்வதேச கடல் சார் அமைப்பு 2010ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 25ஆம் தேதியை மாலுமிகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
வி.பி.சிங்
இந்தியாவின் முன்னாள் பிரதமரான விஷ்வநாத் பிரதாப் சிங் 1931ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
1969ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மேலும், 1971ஆம் ஆண்டு முதல்முறையாக பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். பிறகு, 1980ஆம் ஆண்டு இந்திரா காந்தி இவரை உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக நியமித்தார்.
இவர் டிசம்பர் 2, 1989-லிருந்து நவம்பர் 10, 1990 வரை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தார். தேசிய அளவிலான அரசியல் கூட்டணிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்த இவர் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள் மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
1900ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் இங்கிலாந்தில் பிறந்தார்.
1998ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி விண்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது.
2009ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கல் ஜாக்சன் மறைந்தார்.