வண்ணாரப்பேட்டை மொத்த ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை…
வண்ணாரப்பேட்டை என்றதுமே நினைவுக்கு வருவது புத்தாடைகள்தான். இங்கு நிறைய கடைகளுடன் ஜவுளி வியாபாரம் என்று சொல்லும் பொழுது விற்பனை இங்கு அதிகம் என்பது உண்மை. தி. நகருக்கு அடுத்தபடியாக ஜவுளி வியாபாரத்திற்கு இந்த பகுதி மிகவும் பிரபலமானது.
குறிப்பாக மொத்த ஜவுளி வியாபாரம் அனைத்தும் இங்குதான் ஒட்டு மொத்த சென்னைக்கும் நடைபெறுகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. பெண்களெல்லாம் இணைந்து தங்கள் பகுதிகளில் புடவை வியாபாரம் செய்வதற்கு, கொள்முதல் செய்வது இந்தப் பகுதியில்தான்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களும் தங்களது கொள்முதல் செய்ய முடியாமல் இந்த பகுதியே சற்று தடுமாறிய போது, வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்கம், சிங்காரத் தோட்டம் வியாபாரிகள் சங்கம், கிடங்கு தெரு வியாபாரிகள் சங்கம் என மூன்று வியாபார சங்க நிர்வாகிகளும் இணைந்து, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. ஐடீரீம் மூர்த்தி அவர்களிடம் கோரிக்கை வைத்த பொழுது, இந்த பகுதியில் ஒருவராக அவர்களும் இணைந்து, மூன்று சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்திரு. ககன்தீப் சிங் பேடி மற்றும் துணை ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து, இங்குள்ள ஜவுளி வியாபாரத்தின் கஷ்டங்களையும் தேவைகளையும் முன்வைத்து விரைந்து திறப்பதற்கு ஆவண செய்வதென செய்வதற்கு கோரிக்கை மனுவை அண்ணன் உயர்திரு. ஐடீரீம் மூர்த்தி அவர்களின் தலைமையில் துணை ஆணையர் அவர்களிடம் கொடுத்தார்கள்.
துணை ஆணையர் வரவேற்று, மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்கள்.
இதுபற்றி சங்கத்தின் நிர்வாகிகள் கூறும்போது, ‘சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் அவர்களை சந்தித்தபோது, அன்புடன் வரவேற்று எங்களது கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள். அவருக்கு எங்களது சங்கங்களின் சார்பாகவும் ஜவுளி வியாபாரிகளின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் உயர்திரு. ஐடீரீம் மூர்த்தி அவர்களிடம் கோரிக்கை வைத்த பொழுது, இந்த பகுதியில் ஒருவர் என்று சொல்லி, ஆணையர் மற்றும் துணை ஆணையர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல், அவர்களும் எங்களில் ஒருவராக இந்த ஜவுளித்துறை வியாபாரிகளின் சார்பாக எங்களுடன் இணைந்து, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் அவர்களை சந்தித்து எங்களது குறைகளையும் எடுத்துரைத்த அண்ணன் உயர்திரு. ஐடீரீம் மூர்த்தி அவர்களுக்கு எங்களது வியாபார சங்கம் சார்பாகவும் வியாபாரிகளின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.’ என்று தெரிவித்தார்கள்.
மிகவும் அவசரமான காலகட்டத்தில் சரியான நேரம் ஒதுக்கி ஜவுளி வியாபாரம் சங்கத்தின் நிர்வாகிகளையும் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் உயர்திரு. ஐடீரீம் மூர்த்தி அவர்களையும் சந்திப்பதற்கு அனுமதி அளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் அவர்களுக்கு நன்றி…
கடைகள் திறப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகிறோம். ஆயிரக்கணக்கான ஜவுளித்துறை ஊழியர்கள் வாழ்வில் புத்துணர்ச்சி அளிப்பார்கள் என நம்புகிறோம்.