பேய் ரெஸ்டாரெண்ட் – 7 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 7 | முகில் தினகரன்

மலையாள மாந்த்ரீகனான சங்கரனை பணியில் அமர்த்திக் கொள்ளலாமா? என்று ஆனந்தராஜ் கேட்ட கேள்விக்கு, “இல்லை வேண்டாம்” என்றான் திருமுருகன் திக்கித் திணறி,

கோபம் கொண்ட சங்கரன், வேகமாய்த் திரும்பி திருமுருகனை முறைக்க, அந்த வினாடிய்ல் சங்கரனின் பார்வையில், திருமுருகனின் முதுகிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த “அது” தெரிந்தது. “ஓஹோ…இவனுக்குப் பின்னாடி நீ இருக்கியா?” முணுமுணுப்பாய் தனக்குள் கேட்டுக் கொண்டான் சங்கரன்.

சங்கரன் அப்பாயிண்ட்மெண்டை இரண்டு பார்ட்னர்களும் ஒப்புக் கொண்டபின் திருமுருகன் மட்டும் மறுத்தது ஆனந்தராஜுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. “வேண்டாமா?… ஏன்… ஏன் வேண்டாம்?… இவரு டெமோ பண்ணிக் காட்டிய பர்ஃபாமென்ஸெல்லாம் நல்லாத்தானே இருக்கு?… அப்புறம் ஏன் வேண்டாம்!கறே?”

அடுத்த வினாடியே, “சரி…சேர்த்துக்கலாம்” என்றான் திருமுருகன்.

“டேய்…உனக்கென்ன கிறுக்கா?…முதல்ல கேட்டதுக்கு “வேண்டாம்!”ன்னே… அப்புறம் மிரட்டிக் கேட்டதும் “சரி சேர்த்துக்கலாம்”கறே?… என்னாச்சு உனக்கு?” ஆனந்தராஜ் மறுபடியும் கத்த,

அவனை அமைதிப்படுத்திய சங்கரன், “விடுங்க…சார்!…விடுங்க சார்!.. பேசறது அவரல்ல” என்றான்.

ஆனந்தராஜ் கண்களைச் சுருக்கிக் கொண்டு சங்கரனைப் பார்க்க, “அதைப் பத்தி அப்புறமா சொல்றேன்” என்று சொல்லி விட்டு எழுந்து நடந்தான்.

——————-

ன்று சங்கரனின் முதல் நாள்.

கருப்பு கோட், கருப்பு அங்கி, முகத்தில் கடா மீசை, தலையில் பெரிய முண்டாசு, என்று பார்ப்பதற்கே அச்சமூட்டும் தோற்றத்துடன் வந்திருந்த சங்கரன், தன் குட்டிச்சாத்தான் பொம்மையை முண்டாசின் மீது உட்கார வைத்திருந்தான்.

தன் மூன்று குழந்தைகளுடன், பேய் ரெஸ்டாரெண்டின் திரில் “கிக்”கை அனுபவிக்க வந்திருந்த அந்தப் பணக்காரக் குடும்பத்திற்கு குட்டிக் குட்டியாய் மண்டையோடு வடிவ இட்லிகளை பரிமாறிச் சென்றது ஒரு எலும்புக் கூடு சர்வர்.

எல்லோரும் சந்தோஷமாகவும், லேசான அச்சத்தோடும் உணவருந்திக் கொண்டிருக்கையில்,

மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை மாயமானது.

“ஏங்க….பூஜாக்குட்டி எங்கே?” மனைவி கேட்க,

“இங்கதானே உட்கார்ந்திட்டிருந்தா?” டேபிளுக்கு அடியில் குனிந்து தேடினார் கணவர்.

மனைவி எழுந்து போய் நாலாப்புறமும் தேடினாள்.

அப்போது கருப்பு அங்கி சங்கரன் அவர்களிடம் வந்து, “என்ன சார் தேடறீங்க?” என்று கேட்க, “எங்க குழந்தை…இப்ப இங்க இருந்திச்சு…” என்றார் அந்த நபர்.

“என்ன சார் நீங்க?…உங்க குழந்தை காருக்குள்ளார தூங்கிட்டிருக்கு… அதை இங்க போய்த் தேடறீங்களே?” என்றான் சங்கரன்.

“யோவ்… இப்ப… இங்க என்னோட மூணு குழந்தைகளும் இருந்திச்சுகளே”

“சார்… நீங்க வந்தப்ப இருந்தே இங்க இந்த ரெண்டு குழந்தைகள்தான் சார் இருந்திச்சுக” என்றான் சங்கரன்.

அந்த நபர் தன் மனைவியைப் பார்க்க, அவள், “நோ… பூஜாக்குட்டி இப்ப… இங்க இருந்தா” என்றாள்.

“எதுக்கும் பார்க்கிங்கிற்குப் போய் காருக்குள்ளார ஒரு தரம் பார்த்திட்டு வாங்களேன்” என்று சங்கரன் மீண்டும் சொல்ல,

“யோவ்… உனக்கென்ன கிறுக்கா… மூணு குழந்தைகளும் இங்க இருந்திச்சுக!ன்னு சொல்றேனே?” அந்த நபர் கோபமாகிக் கத்தினார்.

அந்தப் பிரச்சினையைத் தீர்வு செய்யும் முகமாய் அங்கு வந்தான் ஆனந்தராஜ், “என்ன… என்ன இங்க பிரச்சினை?”

அந்த நபரும், அவன் மனைவியும் பதட்டமாய்ச் சொல்லி முடித்ததும், “எதுக்கும் போய் உங்க கார்ல ஒரு தடவை பார்த்திட்டு வந்திடுங்க” என்றான் ஆனந்தராஜ்.

மனைவி லேசாய் சந்தேகமானாள், “உண்மையிலேயே நாம மூணு குழந்தைகளையும் கூட்டிட்டு வந்தோமா?…இல்லை…ஒண்ணை காருக்குள்ளாரவே விட்டுட்டு வந்திட்டோமா?”

“ஏங்க அவங்க ரெண்டு பேரும் சொல்றதுதான் சரி!…கார்ல போய் பார்த்திட்டு வாங்க”

மனைவியை எரிப்பது போல் பார்த்த அந்த நபர், “நான்தானே மூணையும் தூக்கிட்டு வந்தேன்” என்று முணுமுணுப்பாய்ச் சொல்லிக் கொண்டே கீழே போனார்.

பத்தே நிமிடத்தில் கையில் காணாமல் போயிருந்த குழந்தையைத் தூக்கி வந்தார்.

அதைக் கண்டு கோபமான மனைவி, “ஓ மை காட்!… அப்ப காருக்குள்ளாரவே குழந்தையை விட்டுட்டு வந்து நாடகமா ஆடுனீங்க?” என்றபடி சண்டைக்குத் தயாராக,

அவர்களைச் சமாதானப் படுத்தி, “இதுவும் இந்தப் பேய் ரெஸ்டாரெண்டின் இண்ட்ரஸ்டிங் ப்ளே தான்” என்றான் ஆனந்தராஜ்.

அவர்கள் எல்லோரும் சென்ற பின், ஆனந்தராஜ் அந்த சங்கரன் முதுகில் தட்டுக் கொடுத்து விட்டு நகர, “எசக்கி” என்னும் தன்னுடைய குட்டிச் சாத்தான் தன் பாக்கெட்டில் போட்டு விட்ட, குழந்தையின் இரண்டு பவுன் தங்கச் செயினை தொட்டுப் பார்த்துக் கொண்டான் சங்கரன்.

————————————–

டுத்து வந்து பத்து நாட்களில், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வீதம், தங்கச் செயின்கள், மோதிரங்கள், வளையல்கள் போன்றவற்றை தன்னுடைய எசக்கி குட்டிச் சாத்தானைப் பயன்படுத்தி “லபக்” செய்து கொண்டேயிருந்தான் சங்கரன். அவ்வாறு தான் “லபக்” செய்த ஆபரணங்களை சுந்தராபுரம் பகுதியிலிருந்த தன்னுடைய சிஷ்யன் ரமணியிடம் கொடுத்து வைத்திருந்தான்.

அவைகளின் மதிப்பு ஒரு பெருந்தொகையாக ஆன பின், கோயமுத்தூரிலிருந்து எஸ்கேப் ஆகி, கேரளத்திற்கே சென்று விடுவது அவன் திட்டம்.

ஆனால், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டல்லவா?

அந்த வல்லவனாய் மாறினான் திருமுருகன்.

——————-

ரவு ஒரு மணி. தூரத்தில் எங்கோ ஒரு நாய் வினோதமாய் ஊளையிட்டது. அது ஏக்க ஊளையா?….இல்லை தூக்க ஊளையா? என்பது அந்த நாய்க்கு மட்டுமே தெரியும்.

“டக்குடு….டக்குடு…டக்குடு”

கனவில் “நமீதா”வைத் தூக்கிக் கொண்டு குதிரையில் வேகமாய்ப் பறந்து கொண்டிருந்தான் திருமுருகன்.

எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு துப்பாக்கி குண்டு குதிரையின் முன்னங்காலைப் பதம் பார்த்து விட, அப்படியே மடிந்து விழுந்தது குதிரை.

அதிலிருந்து தெறித்து விழுந்த திருமுருகனும், நமீதாவும் பாதையோரப் பள்ளத்தில் கட்டிப் பிடித்து உருளும் போது,

தன் படுக்கையிலிருந்து “தொபீர்” என தரையில் விழுந்தான் திருமுருகன்.

சட்டென்று கண் விழித்து “எல்லாம் வெறும் கனவு” என்கிற உண்மையை உணர்ந்த போதுதான்,

அந்தச் சிரிப்பொலி கேட்டது. பெண்ணின் சிரிப்பொலி.

தரையிலிருந்து வேகமாய் எழுந்து அறை முழுக்கத் தேடினான். “யார் சிரிச்சது?…”

மெல்ல நடந்து தாயின் அறைக்கதவை தள்ளிப் பார்த்தான். உள்ளே அவன் தாய் இல்லை. அப்போதுதான் அவனுக்கே ஞாபகம் வந்தது. “அட…அம்மாவும் ஊரில் நடக்கற மாமா வீட்டுக் கல்யாணத்துக்கல்ல போயிருக்காங்க!…அப்படின்னா இப்ப சிரிச்சது யாரு?”

நாலாப்பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து, “யாரு?…யாரு சிரிச்சது?” வெற்றிடத்தைப் பார்த்து வாய் விட்டே கேட்டான்.

“நமீதா” அவன் காதருகே அந்தக் குரல் ஒலித்தது.

“அடக் கடவுளே!…இந்த குரல் ரெஸ்டாரெண்டில் இருக்கும் போது மட்டும்தான் கேட்டுக்கிட்டு இருந்திச்சு!…இன்னிக்கு வீடு வரைக்கும் வந்திடுச்சா?…” என்று எண்ணியவன், திடீரென்று ஆவேசமாகி, “ஏய்…யார் நீ?…எதுக்கு என் பின்னாடியே சுத்திட்டு இருக்கே?….என்னை சைட் அடிக்கறியா?…லவ் பண்றியா?…அப்படி ஒரு எண்ணமிருந்தா இப்படியே ஓடிடு…எனக்கு ஒரு பேயையோ…மோகினிப் பிசாசையோ லவ் பண்ற அளவுக்கு தைரியமில்லை!…போதுமா?” சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே பேசினான்.

“என்னைப் பார்க்கணுமா?” அந்தக் குரல் கேட்க,

“ஆமாம்…பார்க்கணும்!….பேசணும்!…நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி நாலு வார்த்தை “நறுக்”குன்னு கேட்கணும்!” கோபமாய்ச் சொன்னான் திருமுருகன்.

“அப்ப ஒண்ணு செய்யி!…உன் வீட்டுல எலுமிச்சம்பழம் இருந்தா எடுத்திட்டு வந்து நடு வீட்டுல வெச்சு…ரெண்டாய்ப் பிளந்து…அந்த சாற்றை தரையில் விடு!…அப்புறம் உன்னோட ரத்தம் மூணு சொட்டு அதில் விடு….பிறகு பாரு…என்ன நடக்குது?ன்னு”

சமையலறைக்குச் சென்று, அங்கிருந்த எலுமிச்சம் பழத்தைக் கொண்டு வந்து ஹாலின் மத்தியில் வைத்து அறுத்தான். குண்டூசியால் தன் நடு விரலில் ஓட்டை போட்டு மூன்று சொட்டு ரத்தத்தை அதன் மீது சொட்ட வைத்தான்.

அவன் தன் ரத்தத்தைச் சிந்திய இரண்டாவது நிமிடம், அது பொங்க ஆரம்பித்தது. வெண்புகை கொஞ்சம் கொஞ்சமாய் கிளம்பி, அவன் கண்களை உறுத்த, இறுக மூடிக் கொண்டான்.

ஒன்று….இரண்டு….மூன்று…..நான்கு….ஐந்தாவது நிமிடம், மெல்லக் கண்களைத் திறந்தான்.

ஹால் சோபாவில் அமர்த்தலாய் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண்.

அப்சரஸ் போன்ற அழகுடையவளான அப்பெண் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

ஓவிய முகம், ஒளி வீசும் கண்கள், சுண்டி இழுக்கும் இதழ்கள், அதில் சுகந்தமான புன்னகை, மொத்த தேகமும் இளமை வனப்பின் கிடங்காயிருக்க,

அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

“இவளை…இவளை…இதற்கு முன்னால்…. எங்கோ பார்த்திருக்கோம்..பார்த்திருக்கோம்…எங்கே?…எங்கே?…”திருமுருகனின் மூளை “பர…பர”வென்று தேடியது. ஆனால், அவனால் சட்டென்று கண்டு பிடிக்க முடியவில்லை.

“என்னை அடையாளம் தெரியுதா திருமுருகா?” அவள் கேட்க,

“அது…வந்து…எங்கோ….பார்த்த மாதிரி…ஞாபகம்…வரலை” திக்கித் திணறினான்.

“நானே ஞாபகமூட்டறேன்!…சரியா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி…கிணத்துக்கடவுல தமிழாசிரியர் பொண்ணான என்னை நீ பெண் பார்க்க வந்தே”

கண்களைச் சுருக்கிக் கொண்டு யோசித்து விட்டு, “ஆமாம்…ஆமாம்…நல்லா ஞாபகமிருக்கு!…உங்க பேர் கூட சங்கீதா!…” என்றான் திருமுருகன்.

“பரவாயில்லையே பேர் எல்லாம் கூட ஞாபகம் வெச்சிருக்கியே?” அந்த சங்கீதாவின் ஆவி சொல்ல,

“அதெப்படி மறக்க முடியும்?…நான் கூட அப்ப சபைக்கு முன்னாடி வெச்சே “பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு!…உடனே முகூர்த்த தேதி குறிங்க”ன்னு “பளிச்”சுன்னு சொன்னேன்!…அதுக்காக எல்லோரும் என்னை ரொம்பவே பாராட்டினாங்க!” ஞாபகம் எட்டியதும் சத்தமாய்ப் பேசினான் அவன்.

“உண்மைதான்!…நான் கூட அதீத சந்தோஷத்துல கனவெல்லாம் காண ஆரம்பிச்சிட்டேன்!…ஆனா…நம்ம கல்யாணம் நடக்கலை!…அதுக்கு என்ன காரணம்?னு தெரியுமா?”

“அது…சரியா தெரியலை!…ஆனா நீ..நீங்க…தற்கொலை பண்ணிக்கிட்டதா எங்களுக்கு தகவல் மட்டும் வந்திச்சு!…அதுக்கப்புறம் எங்க வீட்டுல எனக்கு நிறைய இடங்கள் பார்த்தாங்க…ஆனா…ஏனோ எனக்கு கல்யாணத்துல இருந்த ஆர்வமே போயிடுச்சு”

“என்னோட தற்கொலைக்கு காரணம் என்ன தெரியுமா திருமுருகா?” சட்டென்று குரலில் ஒரு சோகம் இழையோட கேட்டது சங்கீதாவின் ஆவி.

“தெரியலையே!…ஆனா…ஏதோ லவ் மேட்டராய்த்தான் இருக்கும்!னு நாங்களே யூகிச்சுக்கிட்டோம்”

“உங்கள் யூகம் தவறு!…உண்மையில் நடந்த கதை வேறு”

“ஓ…எங்களுக்கு எதுவுமே தெரியாது”

“இப்ப சொல்றேன் தெரிஞ்சுக்க” என்று சொல்லி விட்டு சில நிமிடங்கள் அந்த நினைவுகளை அசை போட்ட சங்கீதாவின் ஆவி, விவரிக்க ஆரம்பித்தது.

மலையாள மாந்த்ரீகனான சங்கரனை பணியில் அமர்த்திக் கொள்ளலாமா? என்று ஆனந்தராஜ் கேட்ட கேள்விக்கு, “இல்லை வேண்டாம்” என்றான் திருமுருகன் திக்கித் திணறி,

கோபம் கொண்ட சங்கரன், வேகமாய்த் திரும்பி திருமுருகனை முறைக்க, அந்த வினாடிய்ல் சங்கரனின் பார்வையில், திருமுருகனின் முதுகிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த “அது” தெரிந்தது. “ஓஹோ…இவனுக்குப் பின்னாடி நீ இருக்கியா?” முணுமுணுப்பாய் தனக்குள் கேட்டுக் கொண்டான் சங்கரன்.

சங்கரன் அப்பாயிண்ட்மெண்டை இரண்டு பார்ட்னர்களும் ஒப்புக் கொண்டபின் திருமுருகன் மட்டும் மறுத்தது ஆனந்தராஜுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. “வேண்டாமா?…ஏன்…ஏன் வேண்டாம்?…இவரு டெமோ பண்ணிக் காட்டிய பர்ஃபாமென்ஸெல்லாம் நல்லாத்தானே இருக்கு?…அப்புறம் ஏன் வேண்டாம்!கறே?”

அடுத்த வினாடியே, “சரி…சேர்த்துக்கலாம்” என்றான் திருமுருகன்.

“டேய்…உனக்கென்ன கிறுக்கா?…முதல்ல கேட்டதுக்கு “வேண்டாம்!”ன்னே…அப்புறம் மிரட்டிக் கேட்டதும் “சரி சேர்த்துக்கலாம்”கறே?…என்னாச்சு உனக்கு?” ஆனந்தராஜ் மறுபடியும் கத்த,

அவனை அமைதிப்படுத்திய சங்கரன், “விடுங்க…சார்!…விடுங்க சார்!..பேசறது அவரல்ல” என்றான்.

ஆனந்தராஜ் கண்களைச் சுருக்கிக் கொண்டு சங்கரனைப் பார்க்க, “அதைப் பத்தி அப்புறமா சொல்றேன்” என்று சொல்லி விட்டு எழுந்து நடந்தான்.

——————-

ன்று சங்கரனின் முதல் நாள்.

கருப்பு கோட், கருப்பு அங்கி, முகத்தில் கடா மீசை, தலையில் பெரிய முண்டாசு, என்று பார்ப்பதற்கே அச்சமூட்டும் தோற்றத்துடன் வந்திருந்த சங்கரன், தன் குட்டிச்சாத்தான் பொம்மையை முண்டாசின் மீது உட்கார வைத்திருந்தான்.

தன் மூன்று குழந்தைகளுடன், பேய் ரெஸ்டாரெண்டின் திரில் “கிக்”கை அனுபவிக்க வந்திருந்த அந்தப் பணக்காரக் குடும்பத்திற்கு குட்டிக் குட்டியாய் மண்டையோடு வடிவ இட்லிகளை பரிமாறிச் சென்றது ஒரு எலும்புக் கூடு சர்வர்.

எல்லோரும் சந்தோஷமாகவும், லேசான அச்சத்தோடும் உணவருந்திக் கொண்டிருக்கையில்,

மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை மாயமானது.

“ஏங்க….பூஜாக்குட்டி எங்கே?” மனைவி கேட்க,

“இங்கதானே உட்கார்ந்திட்டிருந்தா?” டேபிளுக்கு அடியில் குனிந்து தேடினார் கணவர்.

மனைவி எழுந்து போய் நாலாப்புறமும் தேடினாள்.

அப்போது கருப்பு அங்கி சங்கரன் அவர்களிடம் வந்து, “என்ன சார் தேடறீங்க?” என்று கேட்க, “எங்க குழந்தை…இப்ப இங்க இருந்திச்சு…” என்றார் அந்த நபர்.

“என்ன சார் நீங்க?…உங்க குழந்தை காருக்குள்ளார தூங்கிட்டிருக்கு…அதை இங்க போய்த் தேடறீங்களே?” என்றான் சங்கரன்.

“யோவ்…இப்ப…இங்க என்னோட மூணு குழந்தைகளும் இருந்திச்சுகளே”

“சார்…நீங்க வந்தப்ப இருந்தே இங்க இந்த ரெண்டு குழந்தைகள்தான் சார் இருந்திச்சுக” என்றான் சங்கரன்.

அந்த நபர் தன் மனைவியைப் பார்க்க, அவள், “நோ…பூஜாக்குட்டி இப்ப…இங்க இருந்தா” என்றாள்.

“எதுக்கும் பார்க்கிங்கிற்குப் போய் காருக்குள்ளார ஒரு தரம் பார்த்திட்டு வாங்களேன்” என்று சங்கரன் மீண்டும் சொல்ல,

“யோவ்…உனக்கென்ன கிறுக்கா…மூணு குழந்தைகளும் இங்க இருந்திச்சுக!ன்னு சொல்றேனே?” அந்த நபர் கோபமாகிக் கத்தினார்.

அந்தப் பிரச்சினையைத் தீர்வு செய்யும் முகமாய் அங்கு வந்தான் ஆனந்தராஜ், “என்ன…என்ன இங்க பிரச்சினை?”

அந்த நபரும், அவன் மனைவியும் பதட்டமாய்ச் சொல்லி முடித்ததும், “எதுக்கும் போய் உங்க கார்ல ஒரு தடவை பார்த்திட்டு வந்திடுங்க” என்றான் ஆனந்தராஜ்.

மனைவி லேசாய் சந்தேகமானாள், “உண்மையிலேயே நாம மூணு குழந்தைகளையும் கூட்டிட்டு வந்தோமா?…இல்லை…ஒண்ணை காருக்குள்ளாரவே விட்டுட்டு வந்திட்டோமா?”

“ஏங்க அவங்க ரெண்டு பேரும் சொல்றதுதான் சரி!…கார்ல போய் பார்த்திட்டு வாங்க”

மனைவியை எரிப்பது போல் பார்த்த அந்த நபர், “நான்தானே மூணையும் தூக்கிட்டு வந்தேன்” என்று முணுமுணுப்பாய்ச் சொல்லிக் கொண்டே கீழே போனார்.

பத்தே நிமிடத்தில் கையில் காணாமல் போயிருந்த குழந்தையைத் தூக்கி வந்தார்.

அதைக் கண்டு கோபமான மனைவி, “ஓ மை காட்!…அப்ப காருக்குள்ளாரவே குழந்தையை விட்டுட்டு வந்து நாடகமா ஆடுனீங்க?” என்றபடி சண்டைக்குத் தயாராக,

அவர்களைச் சமாதானப் படுத்தி, “இதுவும் இந்தப் பேய் ரெஸ்டாரெண்டின் இண்ட்ரஸ்டிங் ப்ளே தான்” என்றான் ஆனந்தராஜ்.

அவர்கள் எல்லோரும் சென்ற பின், ஆனந்தராஜ் அந்த சங்கரன் முதுகில் தட்டுக் கொடுத்து விட்டு நகர, “எசக்கி” என்னும் தன்னுடைய குட்டிச் சாத்தான் தன் பாக்கெட்டில் போட்டு விட்ட, குழந்தையின் இரண்டு பவுன் தங்கச் செயினை தொட்டுப் பார்த்துக் கொண்டான் சங்கரன்.

————————————–

டுத்து வந்து பத்து நாட்களில், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வீதம், தங்கச் செயின்கள், மோதிரங்கள், வளையல்கள் போன்றவற்றை தன்னுடைய எசக்கி குட்டிச் சாத்தானைப் பயன்படுத்தி “லபக்” செய்து கொண்டேயிருந்தான் சங்கரன். அவ்வாறு தான் “லபக்” செய்த ஆபரணங்களை சுந்தராபுரம் பகுதியிலிருந்த தன்னுடைய சிஷ்யன் ரமணியிடம் கொடுத்து வைத்திருந்தான்.

அவைகளின் மதிப்பு ஒரு பெருந்தொகையாக ஆன பின், கோயமுத்தூரிலிருந்து எஸ்கேப் ஆகி, கேரளத்திற்கே சென்று விடுவது அவன் திட்டம்.

ஆனால், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டல்லவா?

அந்த வல்லவனாய் மாறினான் திருமுருகன்.

——————-

ரவு ஒரு மணி. தூரத்தில் எங்கோ ஒரு நாய் வினோதமாய் ஊளையிட்டது. அது ஏக்க ஊளையா?….இல்லை தூக்க ஊளையா? என்பது அந்த நாய்க்கு மட்டுமே தெரியும்.

“டக்குடு….டக்குடு…டக்குடு”

கனவில் “நமீதா”வைத் தூக்கிக் கொண்டு குதிரையில் வேகமாய்ப் பறந்து கொண்டிருந்தான் திருமுருகன்.

எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு துப்பாக்கி குண்டு குதிரையின் முன்னங்காலைப் பதம் பார்த்து விட, அப்படியே மடிந்து விழுந்தது குதிரை.

அதிலிருந்து தெறித்து விழுந்த திருமுருகனும், நமீதாவும் பாதையோரப் பள்ளத்தில் கட்டிப் பிடித்து உருளும் போது,

தன் படுக்கையிலிருந்து “தொபீர்” என தரையில் விழுந்தான் திருமுருகன்.

சட்டென்று கண் விழித்து “எல்லாம் வெறும் கனவு” என்கிற உண்மையை உணர்ந்த போதுதான்,

அந்தச் சிரிப்பொலி கேட்டது. பெண்ணின் சிரிப்பொலி.

தரையிலிருந்து வேகமாய் எழுந்து அறை முழுக்கத் தேடினான். “யார் சிரிச்சது?…”

மெல்ல நடந்து தாயின் அறைக்கதவை தள்ளிப் பார்த்தான். உள்ளே அவன் தாய் இல்லை. அப்போதுதான் அவனுக்கே ஞாபகம் வந்தது. “அட…அம்மாவும் ஊரில் நடக்கற மாமா வீட்டுக் கல்யாணத்துக்கல்ல போயிருக்காங்க!…அப்படின்னா இப்ப சிரிச்சது யாரு?”

நாலாப்பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து, “யாரு?…யாரு சிரிச்சது?” வெற்றிடத்தைப் பார்த்து வாய் விட்டே கேட்டான்.

“நமீதா” அவன் காதருகே அந்தக் குரல் ஒலித்தது.

“அடக் கடவுளே!…இந்த குரல் ரெஸ்டாரெண்டில் இருக்கும் போது மட்டும்தான் கேட்டுக்கிட்டு இருந்திச்சு!…இன்னிக்கு வீடு வரைக்கும் வந்திடுச்சா?…” என்று எண்ணியவன், திடீரென்று ஆவேசமாகி, “ஏய்…யார் நீ?…எதுக்கு என் பின்னாடியே சுத்திட்டு இருக்கே?….என்னை சைட் அடிக்கறியா?…லவ் பண்றியா?…அப்படி ஒரு எண்ணமிருந்தா இப்படியே ஓடிடு…எனக்கு ஒரு பேயையோ…மோகினிப் பிசாசையோ லவ் பண்ற அளவுக்கு தைரியமில்லை!…போதுமா?” சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே பேசினான்.

“என்னைப் பார்க்கணுமா?” அந்தக் குரல் கேட்க,

“ஆமாம்…பார்க்கணும்!….பேசணும்!…நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி நாலு வார்த்தை “நறுக்”குன்னு கேட்கணும்!” கோபமாய்ச் சொன்னான் திருமுருகன்.

“அப்ப ஒண்ணு செய்யி!…உன் வீட்டுல எலுமிச்சம்பழம் இருந்தா எடுத்திட்டு வந்து நடு வீட்டுல வெச்சு…ரெண்டாய்ப் பிளந்து…அந்த சாற்றை தரையில் விடு!…அப்புறம் உன்னோட ரத்தம் மூணு சொட்டு அதில் விடு….பிறகு பாரு…என்ன நடக்குது?ன்னு”

சமையலறைக்குச் சென்று, அங்கிருந்த எலுமிச்சம் பழத்தைக் கொண்டு வந்து ஹாலின் மத்தியில் வைத்து அறுத்தான். குண்டூசியால் தன் நடு விரலில் ஓட்டை போட்டு மூன்று சொட்டு ரத்தத்தை அதன் மீது சொட்ட வைத்தான்.

அவன் தன் ரத்தத்தைச் சிந்திய இரண்டாவது நிமிடம், அது பொங்க ஆரம்பித்தது. வெண்புகை கொஞ்சம் கொஞ்சமாய் கிளம்பி, அவன் கண்களை உறுத்த, இறுக மூடிக் கொண்டான்.

ஒன்று….இரண்டு….மூன்று…..நான்கு….ஐந்தாவது நிமிடம், மெல்லக் கண்களைத் திறந்தான்.

ஹால் சோபாவில் அமர்த்தலாய் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண்.

அப்சரஸ் போன்ற அழகுடையவளான அப்பெண் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

ஓவிய முகம், ஒளி வீசும் கண்கள், சுண்டி இழுக்கும் இதழ்கள், அதில் சுகந்தமான புன்னகை, மொத்த தேகமும் இளமை வனப்பின் கிடங்காயிருக்க,

அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

“இவளை…இவளை…இதற்கு முன்னால்…. எங்கோ பார்த்திருக்கோம்..பார்த்திருக்கோம்…எங்கே?…எங்கே?…”திருமுருகனின் மூளை “பர…பர”வென்று தேடியது. ஆனால், அவனால் சட்டென்று கண்டு பிடிக்க முடியவில்லை.

“என்னை அடையாளம் தெரியுதா திருமுருகா?” அவள் கேட்க,

“அது…வந்து…எங்கோ….பார்த்த மாதிரி…ஞாபகம்…வரலை” திக்கித் திணறினான்.

“நானே ஞாபகமூட்டறேன்!…சரியா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி…கிணத்துக்கடவுல தமிழாசிரியர் பொண்ணான என்னை நீ பெண் பார்க்க வந்தே”

கண்களைச் சுருக்கிக் கொண்டு யோசித்து விட்டு, “ஆமாம்…ஆமாம்…நல்லா ஞாபகமிருக்கு!…உங்க பேர் கூட சங்கீதா!…” என்றான் திருமுருகன்.

“பரவாயில்லையே பேர் எல்லாம் கூட ஞாபகம் வெச்சிருக்கியே?” அந்த சங்கீதாவின் ஆவி சொல்ல,

“அதெப்படி மறக்க முடியும்?…நான் கூட அப்ப சபைக்கு முன்னாடி வெச்சே “பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு!…உடனே முகூர்த்த தேதி குறிங்க”ன்னு “பளிச்”சுன்னு சொன்னேன்!…அதுக்காக எல்லோரும் என்னை ரொம்பவே பாராட்டினாங்க!” ஞாபகம் எட்டியதும் சத்தமாய்ப் பேசினான் அவன்.

“உண்மைதான்!…நான் கூட அதீத சந்தோஷத்துல கனவெல்லாம் காண ஆரம்பிச்சிட்டேன்!…ஆனா…நம்ம கல்யாணம் நடக்கலை!…அதுக்கு என்ன காரணம்?னு தெரியுமா?”

“அது…சரியா தெரியலை!…ஆனா நீ..நீங்க…தற்கொலை பண்ணிக்கிட்டதா எங்களுக்கு தகவல் மட்டும் வந்திச்சு!…அதுக்கப்புறம் எங்க வீட்டுல எனக்கு நிறைய இடங்கள் பார்த்தாங்க…ஆனா…ஏனோ எனக்கு கல்யாணத்துல இருந்த ஆர்வமே போயிடுச்சு”

“என்னோட தற்கொலைக்கு காரணம் என்ன தெரியுமா திருமுருகா?” சட்டென்று குரலில் ஒரு சோகம் இழையோட கேட்டது சங்கீதாவின் ஆவி.

“தெரியலையே!…ஆனா…ஏதோ லவ் மேட்டராய்த்தான் இருக்கும்!னு நாங்களே யூகிச்சுக்கிட்டோம்”

“உங்கள் யூகம் தவறு!…உண்மையில் நடந்த கதை வேறு”

“ஓ…எங்களுக்கு எதுவுமே தெரியாது”

“இப்ப சொல்றேன் தெரிஞ்சுக்க” என்று சொல்லி விட்டு சில நிமிடங்கள் அந்த நினைவுகளை அசை போட்ட சங்கீதாவின் ஆவி, விவரிக்க ஆரம்பித்தது.

< ஆறாவது பகுதி | எட்டாவது பகுதி >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...