வரலாற்றில் இன்று – 01.05.2021 உலக தொழிலாளர் தினம்
இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் அதன் மூலங்களை எட்டு மணிநேர நாள் இயக்கத்தில் கொண்டிருக்கின்றது. இது எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை வாதிட்டது. மே தினம் எனப்படும் உலக தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மன்னா டே
இந்தியத் திரையுலகின் சிறந்த பின்னணிப் பாடகரான மன்னா டே 1919ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரபோத் சந்திரா டே.
இவர் செம்மீன் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார். மக்களின் மனங்களைக் கவர்ந்ததால் இவர் மன்னா டே என்று அழைக்கப்பட்டார்.
60 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த இவரது இசைப் பயணத்தில் இவர் பாடிய பாடல்களில் பெரும்பாலானவை பிரபலமானவைகள். பத்மஸ்ரீ, பத்ம பூஷண், தாதாசாஹேப் பால்கே விருது என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
காலத்தால் அழியாத பல அமரகீதங்களைப் பாடி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ள மன்னா டே, 2013ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1913ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி. சுந்தரய்யா ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் அழகின்படுவில் பிறந்தார்.
1852ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி நவீன நரம்பியல் துறையின் தந்தை சான்டியாகோ ரமோன் கஸல் ஸ்பெயினின் பெடில்லா டி அரகான் நகரில் பிறந்தார்.